97 சங்கீதம்
97 சங்கீதம்
சங்கராபரணம் ஆதிதாளம்
1 கற்தராளுகை செய்கிறார்
காசினி பூரிப்பாகுமே
மெத்தவுந்தீவுகள் மகிழுமே
மேகமந்தாரஞ்சூழுமே
2 நீதிநியாயங்கற்தரின்
நியாயாசனத்தின் மூலமே
மோதுமக்கினி யவர்க்கு
முன்னேவிளங்கி நிற்குமே
3 கற்தர்பகைவரை யக்கினி
சுற்றிலுஞ்சுட்டெரித் தழித்திடும்
கற்தர்மின்னல்கள் பூமியைக்
காட்சியா யொளி வாக்குமே
4 எல்லையான பூமியோ
இதுகளைக் கண்டதிர்ந்திடும்
வல்லமைத் தெய்வப் பிரசன்னம்
மலையைமெழுகா யுருக்குமே
5 சருவபூமியி னாண்டவர்
சமுகத்தால் மலை யுருகுமே
பெரியவானம் அவருடை
பிசகாநீதி யறிவிக்கும்
6 சருவமனித கூட்டமும்
சாமிமகிமை காண்பார்கள்
சுரூபவணக்க வீம்பர்கள்
சுரணைமழுங்கி வெட்குவர்
7 தேவர்என்ற எல்லார்களே
தெய்வம்அவரைப் பணியுங்கள்
மேவுஞ்சீயோ னிவ்வித
மேன்மைகேட்டு மகிழுமே
8 ஞாயம்பிசகா உம்முடை
ஞாயத்தீர்ப்பு வந்ததால்
வாய்மையூதக் கன்னிகள்
மகிழ்ச்சியாய்க் களிகூர்வர்கள்
9 சருவபூமி மீதிலும்
சாமிஉன்னதமானவர்
சருவதேவர் மீதிலும்
சாமி மிகவும் உயர்ந்தவர்
10 எகோவாவை நேசிக்கும்
எதார்த்தமான மனிதரே
பகையைச்சாதித்து நில்லுங்கள்
பாவமான தீமையில்
11 பரிசுத்தர்களின் ஆத்துமம்
பரனால்க் காபந் தாகுமே
பரிவாயவர்களைத் துன்மார்க்கர்
பலத்தகைக்கு விலக்குவார்
12 வெகுவாய் நீதிமானுக்கு
வெளிச்சம் விதைக்கப்பட்டதே
மகிழ்ச்சியும் விதைப் பாச்சுதே
வாய்மை இதைய மாந்தர்க்கு
13 நீதிமான்களே பரனுக்குள்
நித்தம்நித்தம் மகிழுங்கள்
பேதமற்றவர் தனிப்புகழ்
பிரஸ்தாபப்படத் துதியுங்கள்