94 சங்கீதம்
94 சங்கீதம்
1 வது பங்கு வச.1 -15
நாதநாமக்கிரியை ஆதிதாளம்
1 நீதிசரிக்கட்டுகிற தெய்வமான சுவாமீ!
நீதிசரிக்கட்டுகிற நிமலா! வெளிச்சந்தாரும்
2 பூதலத்தைஞாயந்தீர்க்கும் புனிதாநீரே உயர்ந்து
வாதுப்பெருமைக்காரருக்கு வதிலைச்சரிக்கட்டும்
3 எந்தமட்டும் ஆகாதோர்கள்
இகழ்ச்சிபண்ணுவார்கள்
எந்தமட்டும்சுவாமீ! அவர்க
ளிகழ்ச்சிபண்ணுவார்கள்
4 அக்கிரமக்காரரெல்லாம்
ஆக்கிரமித்துப்பேசி
வக்ரமாகப்பெருமைபேசி
வாயாடுகிறார்கள்
5 உம்முடைய சனத்தையவர்க
ளுடைத்து நொறுக்கிறார்கள்
உம்முடைய சுதந்தரத்தை
ஒடுக்கிறார்கள் சுவாமீ!
6 விதவை பரதேசியையும்
வெறுத்துக் கொல்கிறார்கள்
கெதியற்றுவெண் ணிலைப் பட்டோரை
அதமாக்குகிறார்கள்
7 யாக்கோபுடை தெய்வமிதை
யாதுபண்ணாரென்றும்
பார்க்கார்சுவாமி யென்றுஞ் சொல்லிப்
பரியாசஞ் செய்வார்கள்
8 சனத்தில் மிருகக் குணத்தார்களே
யுணர்த்தியடையுங்கள்
பைத்யக்காரச்சனமே யெப்பேர்
பலக்கச்சிந்திப்பீர்கள்
9 காதுதந்தார் தாம்கேளாரோ
கண்தந்தோர் பாராரோ
சாதிகளைத் தண்டிப்பவர்
தாட்டீகஞ்சொல்லாரோ
10 மனுசனுக்கு அறிவுதந்தோர்
வகையை யறியாரோ
மனுசனுடைய நினைவைச்சுவாமி
மாய்கையென்றே யறிவார்
11 ஆகாதோற்கு அழிவுக்குழி
யாகுமட்டுஞ் சகித்து
எகோவாவின் வேதபுத்திக்
கிசைவோன் பாக்யவாளன்
12 தம்முடைய சனத்தைச்சுவாமி
ததியில்க் கைவிடாரே
தம்முடைய சுதந்திரத்தைத்
தள்ளி நெகிழ்ந்திடாரே
13 ஞாயம்நீதி யாகத் திரும்பும்
நல்லஇதையத்தார்கள்
யாவர்களும் அதைப்பின்சென்று
நடத்திக் கொள்ளுவார்கள்
2 வது பங்கு வச.16 -23
விருத்தம்
என்னோடேசேர்ந்து பொல்லாதவர்களுக்கு
எதிராகிப்போராட எழும்புவோனார்
என்கூட அக்கிரமக் காரருக்கு
எதிர்த்துயித்தஞ் செய்வதுக்குநிற்பவன்யார்
என்துணையாயச் சுவாமியெனக் கிருந்திட்டால்த்தான்
என்சீவன் தப்பஇடஞ் சற்றேயுண்டு
என்கால்தள் ளாடுமென்று சொன்னபோதே
எகோவாவின் கிருபையென்னைத் தாங்கலாச்சே
எதுகுலகாம்போதி ஆதிதாளம்
உம்முடையகிருபையென்னை உறுதியாகத்தாங்கும்
உமதுதய வெனைத்தாங்குஉறுதியாகச் சுவாமீ
1 என்மனசில்க்கடும்விசாரம்
எழும்பிநிற்கும்போது
என்மனசில்த் தெளிச்சலுண்டாம்
உம்மள்தேற்றத்தாலே
2 நன்னீதிக்கதனபாரம்
நடுகேட்டாசனத்தால்
உண்டுபண்ணுஞ் சந்தற்பங்கள்
உமக்கிங்கொத்துவருமோ
3 பத்திநீதிப் புருடனுயிரைப்
பறத்தக்கும்புகூடி
குற்றமில்லா ரத்தத்தையுங்
குற்றப்படுத்துவார்கள்
4 எனக்குயர்ந்த அடைக்கலமும்
எனநம்புதல் மலையும்
எனக்குத்தெய்வமானவரும்
என்சாமிநீர் தாமே
5 அவர்களுடை அக்ரமத்தை
அவர்கள்மேலே திருப்பி
அவர்களுடை பொல்லாப்புக்கென்
றவர்களை நீர்கொல்லும்
6 நமதுதெய்வமானசுவாமீ
நறுக்கியவர்களைக் கொல்வார்
நமதுதெய்வமானசுவாமீ
நறுங்கியவர்களைக்கொள்வார்