126 சங்கீதம்
126 சங்கீதம்
அகவல்-படிகள்மே னின்று
படித்திட்ட பாட்டே
உசானி ஆதிதாளம்
கெம்பீரம் மிகவும் நிறையும் நமதுநாவு
கேளிக்கைச் சந்தோஷத்தால்
நம்முடைவாயே நிரம்பும்
கெம்பீரம் மிகவும் நிறையும்
1 தம்பிரானாம் எகோவா சீயோனுடை
தாழ்மையின் சிறையிருப்பை
மேன்மையாய்த் திருப்பும்போது
தரிசனங் கண்டோர்போல நாமிருப்போம்
தற்பரனிவர்க ளிடத்தில்ப் பெரிய
தாக்கமாஞ் செயல்களை நடப்பிவித்தாரென
அப்பொழுதவ்விடத் தன்னிய சாதிக
ளானவர்க்குள்ளேயுஞ் சொல்லிக்கொள்வார்களே
2 எகோவா நம் மிடத்தில்ச்செய்தார் பெருஞ்செயல்கள்
இதுக்காக மகிழ்வோம் என்போம்
எகோவாவே தெற்குவெள்ளம்போல்
எங்கள் சிறையிருப்பை நீக்கும்
வெகுவான கண்ணீரோடே விரைவிரைக்கும்
வெள்ளாண்மைக் காரர்களோ
மிகுந்திட்ட கெம்பீரத்தால்
விளைச்சல்க ளறுப்பார்களே ஆதலினால்
விதைதனை அள்ளித் தூவியே சுமந்தோன்
வெப்பமாயழுது நடந்துகொண்டிருந்தும்
அதன நிற்சயமாய் அறுத்திட்டதனது
கரிர்க்கட்டைச்சுமந்துமே களிப்புடன் வருகுவான்