92 சங்கீதம்
92 சங்கீதம்
அகவல்-ஒய்வுநாள்ப் பாட்டாம்
நேய சங்கீதம்
கழிநெடில்
1 தம்புரினாலும் விணையினினிமைச்
சத்தத்தின் தியானத்தினாலும்
சாமியைத்துதித்து உன்னதர்நாமஞ்
சரிவரக் கீர்த்தனம்பண்ணி
தம்பிரானுண்மை தணை இராமாறுந்
தயவையோ காலமேதினமுஞ்
சத்தியமாகத் துத்தியஞ்செய்து
சஞ்சரிப்பது மகாநலமே
என்பராநீரோ உம்முடைசெயலால்
என்மனம் மகிழ்ந்திடச் செய்தீர்
இதையத்திலுமது கரத்தின் நற்செயலின்
இனிமையால்ப் பூரிப்படைந்தேன்
றெம்பவும்பெரிதாம் உம்முடைசெயல்கள்
நினைக்கையில் அதுமகா ஆழம்
நீசனாம்மனிதன் நினைந்ததையறியான்
நின்மூடனுணர்ந்திடான் சுவாமீ
2 பாவிகளெல்லாப் பாதகர் தாமும்
பலனில்லாப் புல்லுப்போல்ச் செழித்து
பாரினில்ப் பூத்துப் பூத்தபின் என்றும்
பாழடைந்திருப்பதே வழக்கம்
தேவரீர் என்றுஞ் சிறுத்திடாதுயர்வீர்
தேயுவார் உம்முடைபகைஞர்
பாவிகளெல்லாம் பறிந்தழிவார்கள்
பலதிக்குஞ்சிதறியே ஒய்வர்
தேவரீர் எனது திறமென்னுங்கொம்பைச்
சிறந்திடுங் காண்டாவினுடைய
செயகொம்பாய்ச்சமைத்து புதுஎண்ணை கொண்டென்
சிரமபிசேகமே செய்வீர்
கோவமாயென்மே லெழும்பிடும்பகைஞர்
குறுகியேயழிந்திடும் பதிலைக்
கொஞ்சியேபார்ப்பேன் என்னுடைகண்ணால்
குளிரஎன்செவியிலுங் கேள்ப்பேன்
3 நீதிமான்பனைப்போல்ச் செழித்திருப்பானே
நேத்தியாம் லீபனோன்மலைமேல்
நித்தமும்வளருங் கேதுருபோலும்
நீணிலந்தனில்ச் சுகித் திருப்பான்
நாதனின்வீட்டில் நாட்டுண்டமனிதர்
நளினமா யென்தெய்வவீட்டின்
நல்லரண்மனையின் தளவரித்தலத்தில்
நலமுடன் செழித்து வீற்றிருப்பர்
நீதியர்கற்தர் நியாயக்கேடில்லார்
நித்தியகன்மலையென்று
நீணிலத்துள்ள மாந்தருக்கெல்லாம்
நித்தமும் அறிவிக்கும்படிக்குச்
சோதியாயின்மை முதிர்வயதாகியும்
சுகந்தநற்கனிகளைத் தந்து
துருமியசதையும் பசுமையுமாக
சுதித்திருப்பார்கள் நிற்சயமே