85 சங்கீதம்
85 சங்கீதம்
குறள்-கோராகின் புத்திரரில் ராகத் தலைவனுக்கு
நேராக ஒப்புவித்த பாட்டு
1 வது பங்கு வச.1 – 7
விருத்தம்
எகொவாவே உம்முடைய தேசத்தின் மேல்
இட்டம்வைத்து யாக்கோபின் சிறையிருப்பை
அகற்றினீர் உம்முடையசனங்கள்செய்த
அக்கிரமத்ததிக்குமன்னிப் பருளிச்செய்தீர்
எகொவாவே அவர்கள் செய்தபாவத்தைநீர்
ஏசுமாயடியோடே மூடிப்போட்டீர்
மிகுந்தஉம துக்ரமெல்லாம் வாங்கிக் கொண்டு
வெப்பச்சூ டனைத்தும்விட்டுத் திரும்பினீரே
தன்யாசி ஆதிதாளம்
எங்களையீடேற்றுகிற தெய்வமானசுவாமீ
எங்களைநீர் திருப்பும் எங்கள்பேரில் மிகவும்
பொங்குகிறஉம்முடைய கோபமாறப்பண்ணும்
1 எங்கள் மேலே யென்றென்றைக்கும்
தலைமுறைதத்துவமா
எரிச்சல்கொள்ளுவீரோ எகொவா ! உமதுகோபம்
எங்கள் மேலேநீண்டகாலம் எழுந்தடர்ந்துவருமோ
2 உம்முடையசனமெமக்கு உயிரைத் தருவீரே
உம்மில்மகிழ்வோமே உம்முடையதயவை
எம்மிடத்தில்க்காட்டியெம்மை இரட்சித்திடுவீரே
2 வது பங்கு வச.8 – 13
எகொவாவாந்தெய்வம் என்னசொற்சொல்வார்
என்றுநான் கேட்டுநிற்பேன் நம
தெகொவாவாந் தெய்வம் என்னசொற்சொல்வார்
என்றுநான் கேட்டு நிற்பேன்
1 மகிபர் அவர்சனம் அவர்சன்மார்க்கரும்
மதிகேடடைந்திட திரும்பிடாப்படி – எகொ
2 அவர்களுக்கமைதியாய்ச் சமாதானந்தருவார்
அவர்களுக்கமைதியாய்ச் சமாதானந்தருவார் – எகொ
3 பவுசுகள் நம்முடை தேசத்தில் வசிக்க
அவர்ரட்சிப்பவர்க்கிங் கஞ்சுவோர்க்கணுகும் – எகொ
4 கிருபையும்உண்மையும் ஒருமித்துக்கூடும்
அறஞ்சமாதானம் பொருமுத்திசெய்யும் – எகொ
5 உண்மையேபூமியி லுண்டாகி முளைக்கும்
உன்னநீதிகீ ழுற்றிங்கே மகிழும் – எகொ
6 நன்மையுங்கொடுப்பார் எங்களினெகொவா
தன்பலன்தருமே எங்களின் தேசம் – எகொ
7 அவர்முன்நீதி யழியாமல் நடக்கும்
அவர்தம் அடிகளை வழியிலே அமைப்பார் – எகொ