7 சங்கீதம்
7 சங்கீதம்
வெண்பா
எமினிமகனானகூஷி சொன்ன வார்த்தை
நிமித்தியமாய்த்தாவீதெகோவா சமுகத்தை
நோக்கிஉருக்கமாய்த் தன் நுன்பலத்தைச் சொல்லிவைத்த
தாக்கமரஞ்சங்கீ தப்பாட்டு
கலிப்பா
1 என்தெய்வமாம் எகோவாவே
யானும்மை நம்பினவன்
என்னைக்கொல்வோர்யாவருக்கும்
என்னைவிலக்கிரட்சியுமே
2 என்னையிங்கேவிடுவிப்பவன்
இல்லையதினால்என்பகைஞன்
என்னுயிரைச் சிங்கம்இரைபோல்
இழுப்பதற்கு விடவேண்டாம்.
3 என் தெய்வமாம் எகோவாவே
இப்படி நான்செய்ததில்லை
என் கைகளின் அஞ்ஞாயம்
எவ்வள வுமிருந்த தில்லை
4 எனக்கிடுக்கங்காரணமே
யில்லாமற்செய்தவனும்
கனத்ததுன்பம்விட்டோதுங்கக்
கடவுசெய்தேன் என்தெய்வமே
5 இப்படியே நன்மைசெய்த
யான் எனக்குள் ஒத்துவந்து
செப்பமாகஇருந்தவதற்குத்
தீமைசெய்ததுண்டானால்
6 சத்துருஎன்னாத்துமத்தைத்
தரையில் தள்ளத்தொடர்ந்துவந்து
மெத்தத்தூ ளில் என்கனத்தை
மிதுத்துப்பங்கஞ்செய்திடட்டும்
7 ஞாயத்தீர்ப்பையமைத்துவைத்த
நடுவராம்என் சுவாமீ !
கோபத்தில் நீர் இப்போது
குப்பெனவேயெழுந்தருளும்
8 எனக்கிடுக்கஞ்செய்பவர்கள்
இடும்புச்சின நிமித்தியமாய்
எனக்காக உயர்ந்தருளும்
என்தெய்வமேகண்பாரும்
9 அப்பொழுது சனக்கூட்டம்
ஆண்டவராம் உமைச்சூழும்
அப்படியே உயர்தலத்தில்
அவர்கள் நிமித்தந் திரும்பிவிடும்
10 என்தெய்வமேசனங்களுக்கு
ஏற்றஞாயஞ்செய்வீரே
என்நீதியுண்மைப்படி
எனக்குஞாயஞ்செய்தருளும்.
11 ஆகாதோர்பொல்லாங்கை
அழிந்தொழியச்செய்திடுமே
வாகாகநீதிமானை
வாய்மையாய் நிலைநிறுத்தும்.
12 ஈரல்க்குலையிருதயங்கள்
யாவுஞ்சோதித்தறிந்துகொள்ளும்
நேர் நீதியுள்ளதெய்வம்
நீர்தாமே நீர்தாமே.
13 இதயஞ்செம்மையுள்ளோரை
இரட்சிக்கிறதெய்வத்திடம்
கெதியாக என்னுடைய
கேடையந்தானிருக்கிறதே.
14 நீதிஞாய அதிபதியும்
நித்தஞ்சினங்கொண்டிருந்து
பாதகத்தையறுத்துவிடும்
பரிசுத்ததெய்வமும் நீர்.
15 மனந்திரும்பாதிருந்தாக்கால்
வாளைக்கருக்காக்கிடுவார்
சினமாகவில் நாணைத்
தெறிக்கமுஸ்திப்பாக்கிடுவார்.
16 மரணக்கருவியாயுதங்கள்
வாய்ப்பாகச்செய்துவைப்பார்
திரமாகஅம்புகளைத்
தீப்பாணமாக்கிடுவார்.
17 அக்கிரமம்பெற்றெடுக்க
அவன்கெற்பவேதனையாய்த்
துற்செயலையவதரித்தான்
சுத்தமாய்கைபெறுவானே.
18 பள்ளக்குழிவெட்டியேதான்
பறித்தகுழியில்விழுந்திடுவான்
கள்வனவன்உச்சியில்தன்
கடும்வினையேவரக்காண்பான்.
19 என்சுவாமிநீதிப்படி
என்றுமவரைத்துதித்திடுவேன்
உன்னதராம் அவருடைய
உயர்நாமம்புகழ்ந்திடுவேன்.