117 சங்கீதம்
117 சங்கீதம் சங்கராபரணம் ஆதிதாளம் 1 எல்லாச் சாதி யார்களே ஏகோவாவைத் துதியுங்கள் எல்லாச் சனக் கூட்டமே என்று மவரைப் புகழுங்கள் 2 கற்தர் கிருபை நமது மேல்ச் சத்வ மாக இருக்குதே கற்த ருண்மை யென்றைக்கும் நிற்கும் அவரைப் புகழுங்கள்
117 சங்கீதம் சங்கராபரணம் ஆதிதாளம் 1 எல்லாச் சாதி யார்களே ஏகோவாவைத் துதியுங்கள் எல்லாச் சனக் கூட்டமே என்று மவரைப் புகழுங்கள் 2 கற்தர் கிருபை நமது மேல்ச் சத்வ மாக இருக்குதே கற்த ருண்மை யென்றைக்கும் நிற்கும் அவரைப் புகழுங்கள்
115 சங்கீதம் ; 1 – வது பங்கு வச.1-8 பயிரவி ஆதிதாளம் மகிமை பேர் உமக்கே ஆவதாக 1 எகோவா உம்முடைகிருபை சத்யமாம் இரண்டினிமித்தமுமே மகிமை உம்முடை நாமத்துக் காகுமே மாந்தராம் எங்கட் கல்ல – மகிமை 2 எங்கள் தெய்வமாம் ஏகோவா நீரிப்போ யெங்கே…
114 சங்கீதம் வெண்பா இசரவேல் வித்தார் எகிப்பத்தை யாக்கோவ் வம்சத்தார்கள் அன்னியமாம்பாசை நரரை நிசமாய்விலகவிட்டு நீங்கிவந்த நாளில் இசைவாம் அதிசயமிதே சங்கராபரணம் ஆதிதாளம் இயூதாவோ தனிவிசேடச் சாதி நல்ல இயூதாவோ தனிவிசேடச் சாதி பரனுக்கு இயூதாவோ தனிவிசேடச் சாதி எகோவாவுக் கிசராவே லாளுகை யானான் ஆனான் ஆனான் 1 யோர் தான்பின் னிட்டே யோடிப்போயிற்றே …
113 சங்கீதம் புன்னாகவராளி ஆதிதாளம் கற்தரிடஞ்சேவிப்போர்களே இங்கே கற்தர் நாமந் துதிசெய்யுங்கள் இதோ 1 கற்தர் நாமம் இன்றுமுதல் காசினியி லென்றென்றைக்கும் நித்தியமுந் துதிக்கப்படும் நிலவரத்தை யறிந்துகொண்டு – கற்தரி 2 சூரியனிங் குதிக்குந்திசை துடங்கியது அஸ்தமிக்குந் தூரமட்டுங் கற்தர் நாமம் துதிக்கப்படத் தகுந்ததாமே – கற்தரி…
112 சங்கீதம் எதிர்குலகாம்போதி ஏகதாளம் பாக்யவானல்லோ அல்லேலுயா பாக்யவானல்லோ இம்மனிதன் பாக்யவானல்லோ 1 தாக்கமாய் ஏகொவா கற்பனை மேலேகண் நோக்கிமிகப் பிரியங் கொண்டிடு மானிடன் – பாக்ய 2 வல்லபமாகிடும் அவன்வித்துப் பூமியில் நல்லோர்கள் சந்ததி யாசீர்வாதம்பெறும் – பாக்ய 3 அவன்வீட்டிலாஸ்தியும் ஜஸ்வரியமுமாம் அவன் நீதியென்றென்றும் அசையாமல் நிலைநிற்கும் –…
111 சங்கீதம் ; மோகனம் ஆதிதாளம் செம்மையானவர்கள் சங்கஞ்சபையிலெகோவாவை நான் என்மனமுற்றுமிசையத்துதிப்பேன் அல்லேலுயா 1 றெம்பப்பெரியதவர் செயல்கள் அதை நினைக்கும் விருப்பங்களெல்லாம் நிலைசரியாய்ப் பகுத்தெடுத்து பிரித்தெடுத்துக் கொண் டாடப் பட்டதுகளாமே – செம் 2 அவருடைய செயல் மகிமைகனகுமானதாமே ஆமாம் அவருடைய நீதி என்றும் என்றும்…
110 சங்கீதம் தாவீதின் சங்கீதம் காம்போதி ஏகதாளம் மகா எகோவா எந்தன் ஆண்டவ ருடனே நீரெனது வலப்பக்கத்தாசனத்தில் உட்கார்ந் திருமென்று வாழ்த்தினரே 1 பகைவரை உமது பாதத்தின்கீழ்நான் படியாகக் கீழ்ப்படுத்தும் வகையைநான்செய்து முடித்திடும்வரைக்கும் நீரிங்கே இருமென்றார் – மகா 2 உம்முடைவல்லமைச் செங்கோலைச் சீயோன் உன்னதத்திருந்தனுப்பி உம்முடைபகைஞர் நடுவிலேயாளுகை…
109 சங்கீதம் குறள் – றாகத் தலைவனுக்கு றாசனாந் தாவீது பாகமா யொப்புவித்த பாட்டு 1 வது பங்கு வச.1-5 விருத்தம் 1 துன்மார்க்கன் கபடவாய் எனக்கெதீராய்ச் சொல்லச்சொல்லத் திறந்திருக்கும் ஆதலாலே என்துதியின் தெய்வமே மவுனமாக இருந்திடாதெழுந்நெனது முகத்தைப்பாரும் என்னுடனேகள்ளநாக் கெடுத்துப்பேசி என்னைப்பகைவார்த்தைகளால்ச் சூழ்ந்துகொண்டு என்மேலேமுகாந்தரங்கள்…
108 சங்கீதம் அகவல் – தாவீதினுடைய பாவாஞ் சங்கீதம் துசாவத்தி ஆதிதாளம் என்னிதையம் என்தெய்வமே எத்தனமாயிருக்கும் உன்னதமாய்ப்பாடியும்மை உயர்த்திப்புகழ்ந்திடுவேன் 1 என்மகிமையுந் தம்பூர்வீணையும் ஏற்றகாலையில் விழிக்குமே – என் 2 சாதிகளுக் குள்ளுஞ்சனக் கூட்டங்களுக்குள்ளும் சாமிஉமக் கேற்றதுதிச் சங்கீதங்கள்பாடுவேன் ஆதிவானம் ஆகாச மண்டலங்கள் மட்டும் ஆண்டவரே உமதுகிருபை சத்தியமும்எட்டும்…
107 சங்கீதம் இந்துஸ்தன் காப்பி ஏகதாளம் எகோவா நல்லவர் எகோவா நல்லவர் எகோவா நற்கிருபை நமக்கு என்றென்று முள்ளதல்லோ அவருக் கேற்றிடத் துதிசெய்யுங்கள் எகோவாசத்துரு கைக்கு நீக்கியே இரட்சித்துக்கிழக்கு மேற்குவடக்கு இசைந்த தெற்குத்திசை யானபல இடங்களி லிருந்துவந்தோர் இப்படி இயம்பக் கடவர்கள் -எகோ 1 வது பங்கு வச.3-9 (பிரயாணக்காரர்) 1 வாசம்பண்ணஊரைக் காணாமல் …