99 சங்கீதம்
99 சங்கீதம்
காம்போதி ஆதிதாளம்
கேரூபின்மேலேதங்கும் சுவாமி கிருபைஏகொவா அவர்
கெட்டியாளுவார் சனத்திரள்மாந்தர்கள்
கிடுகிடென்றஞ்சட்டும் பூமியுமசையட்டும்
1 பேர்பெறுஞ்சீயோனில் சுவாமி
பெரியவர் பெரியவரே அவர்
பிரசைக்கூட்டங்கள் யாவர்பேரிலும்
பெருக்க உன்னத மாகவேயிருப்பவர் – கேரூ
2 மகத்துவம்பயங்கரமாம் உமது
மகிமைநாமமொன்றே எங்கும்
மகாதனிப்புக ழானதாலதை
மனிதக்கூட்டங்கள் வாழ்த்தியே துதிப்பார்கள்
நிகழ்த்து ஞாயம்நாடும் ராசர்
பெலத்தைப்போற்றுவார்கள் தெய்வம்
நீதிஞாயத்தை யாக்கோபிடத்தில்
நேர்மையாகவே செய்திங்கேவருகிறார் – கேரூ
3 செம்மையாய்த் தெய்வபக்தர்க் குள்ளே
மோசே ஆரோனும் நமது
தெய்வநாமத்தை நோக்கினபேர்க்குள்ளே
சாமுவேலுஞ் செய்ததுபோலவே
நம்முடையதெய்வமான மகா
எகோவாவை யுயர்த்திடுங்கள் மிகு
நாட்டமாயவர் பாதப்படி யண்டையில்ப்
பணிந்துகொள்ளுங்கள் அவர்தனிவிசேடத்தோர் – கேரூ
4 கற்தரு கபையம்வைக்க அவர்
அவர்களுக்குத்தரவைத் தந்து
காதலாகவே மேகத்தூணினில்
அவர் களுடனே பேசிக்கொண்டனர்
கற்தரின்சாட்சிகளை அவர்கள்
கைக்கொண்டு நின்றார்கள் அவர்கள்
கற்தர்தங்களுக் கமைத்தஞாயப்
பிரமாணத்தையும் பிடித்துநின்றார்கள் – கேரூ
5 அவர்களுக்குத்தரவை நீர்
அருளிச்செய்தீரே நீர்
அவர்கள்பாவத்தை மன்னித்தும்வந்தீரே
அவர்கள்செய்கைக்கு நீதிசரிக்கட்டினீர்
அவையில் நம்எகோவா வான
சுவாமியை யுயர்த்திடுங்கள் அவர்
அதனநல்விசேடத்து மலைநோக்கிப்பணியுங்கள்
அதனநல்விசேடத்தோர் நம்முடைஏகோவா – கேரூ