98 சங்கீதம்
98 சங்கீதம்
1 வது பங்கு வச.1-3
உசேனி ஆதிதாளம்
ஏகோவாவைப் பாடிடுங்கள் புதுப்பாட்டாக
ஏகோவாவைப் பாடிடுங்கள்
1 மகா அதிசயங்களை வலதுகையாலுண்டுபண்ணி
வகைவகையாய்ரட்சித்தாரேவல்வி சேடக் கையினாலே – ஏகோ
2 பிரஸ்தாபமாக்கினாரே எகொவாதம்
பெரியநல் மீட்பைத்தானே
அரங்கேற்றிவைத்தார் கற்தர் அவருடைய நீதிதன்னை
தறணியிலுள்ள எல்லாச்சாதிக்குமுன்பாகவும் – ஏகோ
3 இசரவேல்வீட்டுக்காக கிருபையுண்மை
இட்டமாக நினைவுகூர்ந்தார்
இசைவாகப் பூமியெல்லை எல்லாவற்றும் நம்முடைய
எசமானாம் ஏகொவாவின்
இரட்சிப்பைக் காண்கிறதே – ஏகோ
2 வது பங்கு வச.4-9
பூமியின்குடிகாள் எல்லாருஞ்
சாமிக்கென்றார்ப்பரியுங்கள்
1 சாமீக்குக்கீதஞ் சுர மண்டலங்கொட்டியே
சத்தங்கெம்பீரமாய் முழங்கிப்பாடுங்கள் – பூமி
2 கற்தரெம்ராசருக்கு முன்பாகக்
காட்டுங்கள் கெம்பீரத்தை
துத்தியமாகவே பூரிகை எக்காளத்
தொனியாலவரைப் போற்றிப்பாடுங்கள் – பூமி
3 சமுத்திரமதினிறைவும் பூமியுஞ்
சனமுமே முழங்கிடட்டும்
நமக்காகக்கற்தர்முன் ஆறுகள்கைகொட்டி
நடனமாய்மலைகளை ஏகமாய்மகிழட்டும் – பூமி
4 எகோவாவருகிறாரே பூமிக்கு இன்பமாய்நீதிசெய்ய
மகாநல் நிதானத்தைச் சனக்கூட்டத்தாருக்கும்
வழுவற்ற நீதியைப் பூமிக்குஞ்செய்வாரே – பூமி