95 சங்கீதம்
95 சங்கீதம்
1 வது பங்கு வச.1 -6
எதுகுலகாம்போதி சாபுதாளம்
சங்கீர்த்தனம்பண்ணுவோம் கெம்பீரமாய்ச்
சங்கீர்த்தனம்பண்ணுவோம்
1 சங்கையாய்நம்மையே தற்காத்துரட்சித்த
சாமியுங்கன்மலைத் தாவு மாங்கற்தரை -சங்
2 கற்தரின்சன்னதி யானதின் முன்பாகக்
கா தலாய்த்துத்திய மாகவே வந்துநாம்
கற்தருக்கார்ப்பரிப் புடனேநாஞ் சங்கீதங்
கணித்துப்பாடியே குதித்துப்பாடுவோம் -சங்
3 நம்முடைய தெய்வமாங் கற்தரே மகாபெரும்
நாமந்துலங்கிய தெய்வமேயானவர்
இம்மையின் தேவர்கள் யாரிலுமகாபெரிய
இராசனுமகா ஈசனுமானவர் -சங்
4 பூமியினுடையதாம் பொறுப்பானரகசியம்
புண்ணியராம் அவர் கைதனிலுள்ளதே
சாமிக்குப்பற்வத மாகிய மலைகளின்
சகலமாம்உயர்த்தியுஞ் சொந்தமாயிருக்குதே -சங்
5 கற்தரினுடையதே கடலென்ற சமுத்திரம்
காரணமாயவர் தாமதைச் செய்தவர்
கற்தரின்நற்கரம் உலர்ந்தாந்தரையும்
கருத்துடன் உருவாகப் பிடித்திங்கேவைத்து -சங்
6 இத்தன்மையானவ ரெம்மையுண்டாக்கின
எகோவாவாந்தெய்வமே யானதினாலேநாம்
மெத்தவுங்குனிந்தவர் சமுகத்தில்ச்சாட்டாங்க
விழுதலாய்முழங்காலை யூன்றிடுவோமாக -சங்
2 வது பங்கு வச.7 – 11
தன்யாசி ஆதிதாளம்
எகோவாவினுடையசொந்த மேய்ச்சலின்சனம்நாமே
கரத்தினாடுகள்நாமே காதல்ரமந்தையுநாமே
ஏகோவாவோ நம்முடைய தெய்வமுமேயானார்
1 ஆகையாலேஇன்றவர்சொல் கேட்டநீங்கள்வனத்தில்
சண்டைமூட்டும்நாளில் சோதனையின் நாளில்
ஆகினதுபோலேநெஞ்சை அழுத்தமாக்காதிருங்கள் -எகோ
2 அங்கேயந்தவனாந்தரத்தில் உங்களுடைபிதாக்கள்
என்னைசோ தனைபண்ணி என்னைப் பரீட்சைபார்த்து
சங்கையாமென்செயல்களைச் சாலவுங்கண்டார்கள் -எகோ
3 நாற்பதாண்டாம்வருடமாக நானேயந்தச்சனத்தை
மனந்தப்பியேநடக்கும் வழியறியாரென்று
தீழ்ப்பாகநான் அருவருத்துத் தீர்த்தேனென்றுசொன்ன -எகோ
4 அப்படித்துன்மார்க்கஞ்செய்த அவர்களோ என்னுடைய
ஒய்வுக்குள்ளேபுகுந்து உட்படார்களென்று
வெப்பமாகஆணையிட்டமெய்த்தெய்வமேயான -எகோ