93 சங்கீதம்
93 சங்கீதம்
காம்போதி ஆதிதாளம்
கற்தர்ராச்யம் மகா மகத்வராச்யம்
1 சத்துவத்தா லரைகட்டினார்
சாமிமகத்வ மணிந்துகொண்டார்
தத்தளிக்கா தென்றும் பூமி
தாபகமே யடைந்திருக்கும் -கற்தர்
2 உம்முடைய ராசானாம்
உறுதியாமே ஆதிமுதல்
உம்முடைய இருப்பனாதி
யுகங்களாய் நின்றிருக்கும் -கற்தர்
3 ஆறுகளோ அமளியான
ஆலைகளை யேறெடுக்கும்
ஆறுகளே யலைகளுடன்
அமிட்டிநிற்கும் ஆண்டவரே -கற்தர்
4 கடலலை வீரியமுங்
கடுந்தண்ணீர் வீரியமும்
திடமல்ல உன்னதத்தின்
தெய்வவீரியச் செயலைவிட் -கற்தர்
5 கற்தருடைய சாட்சிகளோ
மெத்தமெத்த உண்மையாமே
நித்தமுந் தனிவிசேடங்
கற்தர்வீட்டி னலங்காரம் -கற்தர்