91 சங்கீதம்
91 சங்கீதம்
வெண்பா
உன்னத தெய்வ ஒதுக்கி லிருக்கிறவன்
இன்மமுமெல்லா வலுமையும் பண்ணிவரும்
சாமிநிழலில் ராத் தங்கிவந்து நித்தமும்
பூமியிலே சஞ்சரிப்பா னே
மத்திய மாவதி ஆதிதாளம்
எகோவாதாம் எனதுதஞ்சம் நானேநம்பும்
என்பரன் என்கோட்டை யென்பேன்
1 மிகுகொள்ளை நோய்க்கும் வேடர்
வினைக்கண்ணிக்கும் விலக்கிநிற்கும் -எகோ
2 அவர்சிறகு செட்டைக்குள்ளே திடமதாக
அமையஉன்னை மூடுவாரே
அவரின் உண்மை கேடையமாம்
ஆகத்துக்கும் பரிசையாகும் -எகோ
3 இருள்நடப்பாங் கொள்ளைநோயும் பகல்நடப்பாம்
இராவணுவத்தின் கருவியம்பும்
இராவிருளின் பயங்கரமும்
ஏதொன்றுஞ்செய்யாது அஞ்சாய் -எகோ
4 ஆயிரம்பேர்உனதுபக்கம் பதினாயிரம்
ஆட்களுந்தன் வலதுபக்கம்
சாயும்போதும் உன்னண்டைக்குச்
சாவுதாண்டிவரமாட்டாது -எகோ
5 உன்னுடையகண்களாலே மாத்திரமதை
ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொள்வாய்
துன்மனித ரிடத்தில்த் துன்பம்
சுவாமிசரிக் கட்டப் பார்ப்பாய் -எகோ
6 என்னவென்றால் எகோவாதாமே எனக்கென்றென்றும்
ஏற்றதஞ்ச மாகினாரே
உன்னதத்தின்பரனை வைத்தாய்
உனக்கு நல்லதாபரமாய் -எகோ
7 தீங்குனக்குநேரிடாது உன்கூடாரம்
சேர்ந்திடாது வாதைநோயும்
தாங்கஉனக்காக எகோவா
தமதுதூதர் கேவல் சொல்வார் -எகோ
8 உன்வழிகளெல்லாம் உன்னைக் காப்பதற்கு
உன்னுடைய பாதங்கல்லில்
இன்னமேநீ யிடராதுன்னை
யேந்துவார்கள் அவர்கள் கையால் -எகோ
9 சிங்கக்குட்டி வல்லபாம்பும் மிதிபடுமே
திடம்பெற்ற உனதுகாலால்
சிங்கம்விரியன் பாம்பின்மேலும்
செயமாகநடந்து போய்வா -எகோ
10 நமதுநாம மறிவதாலே நாமவனை
நல்லதஞ்சந் தன்னில்வைப்போம்
நமதுமேலே வாஞ்சைகொண்டான்
நாமவனைக் காப்போமென்ற -எகோ
11 நம்மைநோக்கிக் கூப்பிட்டாக்கால் மறுமொழியை
நாமவனுக் கருளுவோமே
துன்பத்துக்கு அவனைவிலக்கித்
துணைமகிமை செய்வோமென்ற -எகோ
12 நீடியவாழ் நாள்க்களாலே நாமவனை
நிறைவடையத் தெய்தம்மாந்தன்
நாடும்நல்ல இரட்சிப்பையும்
நாமவனுக் கருள்வோமென்ற -எகோ