9 சங்கீதம்
9 சங்கீதம்
குறள் – ராகத்தலைவன் முதுலாப்பேன் வீணையில்
வாசித்த தாவீ தின் பாட்டு கட்டளைக் கலித்துறை
1 என்முழுநெஞ்சத்தால் உம்மை நான்போற்றுவேன் என்தெய்வமே
உம்முடைஅற்புதம்யாவையும் நானிங்கே ஒதிடுவேன்
உம்மிலேபூரித்துக்களித் திடுவேன்மகா உன்னதரே
உம்முடைநாமத்தைப்பாடுவேன் நானிந்த உலகினிலே
2 என்பகையாளிகளிடருண்டேயில்லாமற் பின்திரும்பி
உம்முடைமுகத்தின்முன் ஒய்ந்தனர் ஆசனத்துட்காருவீர்
என்ஞாயந்தாபந்தந்தீர்ந்திடநீதி யெசமானனாய்த்
துன்மார்க்கமாந்தனை உதம்பிடுவீர் நீர் துட்டர்களை
3 அவர்களினாமத்தையென்றைக்கும்பேர்த்தே அகற்றிவிட்டீர்
அவமாகப்பகைஞரின் பாழ்க்கடிப்பென்றென்றும் அறுந்ததுவே
அவர்களினூர்களை நிற்மூலமாக்கிய அவர்களின்பேர்
அவர்களின்தேகத்தோ டழிந்திடச்செய்திட்டீர் ஆண்டவரே
4 ஏகோவா என்றைக்குமிருப்பார் தம்மாசன இருப்பமைப்பை
வாகுடன்ஞாயத்தீர்ப் பாகிடமுந்தவே வகுத்திடுவார்
சேகையாய்ப்பூமிக்குஞாயத்தை நீதியாய்த் தீர்த்திடுவார்
பாகமாய்நீதத்தைப்பலசாதித்திரளுக்கும் பகிர்ந்திடுவார்
5 கற்தர்மெய்த்தஞ்சமேசிறுமைகள்பூமியிற் கண்டவர்க்கு
கற்தர்தாம்பாரிக்கத்தஞ்சமே துன்பத்தின் காலந்தன்னில்
கற்தரின்நாம மரிந்தோரேயவருக்குக் காத்திருப்பார்
கற்தரைத்தேடியமா ந்தரைக்கைவிடார் காத்திடுவார்
6 சீயோனில்தங்கிய தெய்வத்தைப்புகழ்ந்தவர் செயல்விரித்து
ஒயாமல்ப்பூமியின் சனத்திரட்குள்ளென்று மோதிடுங்கள்
தீயோர்கள்பழிசெய்த ரெத்தத்துக்கேற்ற நற் சிட்சைசெய்வார்
மாயாதெளியவர்கூப்பாட்டைச்சுவாமியே மறப்பதில்லை
7 பேயின்சாவாசல்விட் டென்னையுமுயர் ந்திடும் பெரியவரே
சீயோனின்குமாரத்தி வாசலிலும்முடை தேர்ந்தபுகழ்
வாயாலேமுற்றிலும் சொல்வேன் நான்உம்முடை மன்னிப்பினால்
நேயா! மகிழ்வேன் என்பகைவர்செய் நிந்தையை நினைந்தருளும்
8 சாதிகள்வெட்டினபள்ளத்தி லமிழ்த்தினர் தங்களையே
தீதுடன்வைத்திட்டவலையிலே யவர்கள்கால் சிக்கினதே
நீதிசெய்செய்கையால் சுவாமியேவிளங்கினர் நெஞ்சஞ்சொல்லும்
பாதகன் தங்கையின்செய்கையில்ச் சிக்கியே பட்டழிந்தான்
9 பொல்லாதமாந்தரும்புண்ணியதெய்வத்தைப் போற்றல்செய்யா
எல்லாஇவ்வுலகத்தின் சாதியும் நரகத்துக் கேகுவார்கள்
இல்லாதஏழையை ஏகொவா மறப்பது என்றுமில்லை
அல்லல்ப்படுபவர்நம்பிக்கைஎன்றைக்கும் அசைவதில்லை
10 ஈனமெய்மனுசனேபெலன்கொண்டிடாமல் நீர் எழுந்தருளும்
மானிலச்சாதிகள் ஞாயத்தைஉம்மள்முன் வகுத்திடுமே
ஈன ராஞ்சாதிகள் தாங்கள்பொய்மானிடரென்றறிய
சேனையின் ஏகொவா! அவர்களே அஞ்சிடச் செய்தருளும்