89 சங்கீதம்
89 சங்கீதம்
குறள்-ஏசுரா கியகான எத்தானின் புத்தி
வசனத்துச் சங்கீத மே
1 வது பங்கு வச.1 – 5
நாதநாமக்கிரியை ரூபகதாளம்
1 எகொவாஉம்மை! உமது கிருபைத்திரள்
என்றும் பாடுவேன் நான்
எகொவாஉம்மை என்வாய்சொல்லும்
வம்ச பாரம்பரையாய்
2 செயமாய்த் தலை முறைத்துவமுன்
சிங்காசனம் நாட்டி
உயிர்த்தென்றுமுன் வித்தையில்
உறுதி செய்வே னென்றீர்
3 உமதுதாசன் தாவீதைநீர்
உறுதியாகத் தெரிந்து
உமது உடம்படிக்கையவனுக்
குண்டுபண்ணி வைத்தீர்
4 உரமாயிந்தக் கிருபையென்றும்
உன்னதத்தில் நிலைக்கும்
பரமண்டலந்தனிலும் உம
துண்மையுறுதியாகும்
5 இதுகணிமித்தம் பரமண்டலத்
திருப்போர்சுவாமீ! உமது
அதிசயத்தைப் பாடியிங்கே
யதிகமாகத் துதிப்பர்
6 சந்தோசமாய்ப் பரிசுத்தர்கள்
சபைகூடிய இடத்தில்
இந்த உமதுண்மை தானே
இதமாய்விளங்கி நிற்கும்
2 வது பங்கு வச.6 – 14
[என் இஷ்டரே]
மகாவுயர்வுத்தலத்தில் வலுவுள்ளோர்மக்களிலே
எகோவாவுக்குநிகர்யார் யார் என்கிறேன்
1 மிகுஅதனவிசேடத்து
மேன்மைச்சங்க மானதிலே
எகோவா பயங்கரமானவர்
ஆம்என்கிறேன் -மகாவுயர்
2 எகோவாவோ தம்மைச்சுற்றி
யிருப்பவர்கள் யாவர்மேலும்
மிகவும் பயங்கரமானவர்
ஆம்என்கிறேன் -மகாவுயர்
3 மல்லுச்சேனைத் தெய்வமான
மகிமையொகொவா உம்மைப்போல
வல்லமைகள் பொருந்தியவரார்
யார் என்கிறேன் -மகாவுயர்
4 சுவாமியுமதுண்மை யும்மைச்
சுற்றிச்சூழ இருக்கிறதே
சுவாமியைப்போல் வல்லவர்களார்
யார் என்கிறேன் -மகாவுயர்
5 சாமிகடல்ப் பெருமையதின்
தண்ணீரமளிக் கொந்தளிப்பும்
ஊமைபோலே யடங்கச் செய்பவர்
ஆம்என்கிறேன் -மகாவுயர்
6 றாகாப்பென்னும் எகிப்துநாட்டை
நசுக்கிவெட்டப்பட்டோனைப்போல்
போகப்பண்ணுபவரும் அவர்தான்
ஆம்என்கிறேன் -மகாவுயர்
7 உமதுவலுமைப் புயத்தினாலே
உம்முடைய சத்துருக்கள்
குமைந்துவிலகச் செய்து வைப்பீரே
ஆம்என்கிறேன் -மகாவுயர்
8 பூமிவானம் உமதுசொந்தம்
பூச்சக்கரம் அதின்நிறைவும்
சாமியஸ்திவாரம் போட்டதே
ஆம்என்கிறேன் -மகாவுயர்
9 நற்கூர்த்தாபோர் ஏர்மோனும்து
நாமம்விளங்கக் கெம்பீரிக்கும்
தெற்கும்வடக்கும் படைத்துவிட்டீரே
ஆம்என்கிறேன் -மகாவுயர்
10 உமக்குவலுத்த புயமேயுண்டு
உயர்ந்ததுமது வலதுகரம்
உமதுகையே பெலத்ததாகிடும்
ஆம்என்கிறேன் -மகாவுயர்
11 ஞாயம் நீதி உம்முடைய
ஞாயாசன அஸ்திவாரம்
ஞாயங்கிருபை யுமக்கு முன் செல்லும்
ஆம்என்கிறேன் -மகாவுயர்
3 வது பங்கு வச.15 – 18
தில்லானா ஆதிதாளம்
கெம்பீர மறிந்தசனம் எங்கெங்குஞ்
சம்பூர்ண பாக்யசனம்
1 தம்பிரானாம் உமதுசமுகத்தின் வெளிச்சம்
தழுவி நடந்திடுவார்களே ஆமவர்கள் -கெம்
2 நாதரானஉமது நாமத்திலவர்கள்
நாள்தோறும் பூரிப்பார்கள் ஆமவர்கள் -கெம்
3 நித்தம்நித்தம்உமது நீதியாலவர்கள்
மெத்தவுமேஉயருவார்கள் ஆமவர்கள் -கெம்
4 அவர்களுடைபெலத்துக் கலங்காரமான
(சவை) மகிமை நீர்தாமே ஆமவர்கள் -கெம்
5 உம்முடையதயவால் உலகத்திலெங்கள்
கொம்புமிக உயர்ந்திடுமே ஆம்எங்கள் -கெம்
6 எங்களுடைகேடையம் எகோவாவினாலே
இங்கமேயுறுதியாகும் ஆம்என்றும் -கெம்
7 இசரவேலுக்கதன விஷயமானவரால்
நிசமாயெம்மரசனுண்டு ஆம்என்றும் -கெம்
4 வது பங்கு வச.19 – 37
யமுனா கலியாணி ஆதிதாளம்
தெரிசனத்தில் தெய்வஞ்சொன்ன வாக்கிதுவே
1 ஒருசவுரிய புருடன் மேலே
உதவிசெய்கிற சத்தியை வைத்தேன்
நரரில தனவிசேடமாக
நாங்குறித்தவ னுயரச் செய்தேன் – தெரி
2 என்னுடைதாசனாம் தாவீதவனே
இராசனாப் பட்டாபிசேகம்பண்ணினேன்
என்னுடைகையவ னுடனே யுறுதியாம்
என்புயமவனையே உறுதிப்படுத்திடும் – தெரி
3 சத்துருஅவனை யெத்துவதில்லையே
தப்பிலியவனை யொடுக்குவதில்லையே
சத்துருகையை நா னவன்முன்னே நறுக்குவேன்
சங்காரம்பண்ணுவே னவனுடைபகைஞரை – தெரி
4 என்னுடைஉண்மையே யவனுடன் தங்கிடும்
என்னுடைகிருபை யவனோடிருந்திடும்
என்னுடை பெரிய நாமத்திலவனுடை
எக்காளிப்பாகிய கொம்புமே உயர்ந்திடும் -தெரி
5 அவனுடை வலதுகை நதிகளையாண்டிடும்
அவனுடைகை பெருஞ் சமுத்திரமாண்டிடும்
அவனென்னைத்தன்னுடை ரட்சிப்பின்கன்மலை
அப்பன்தெய்வமென் றழைத்துக் கூறுவான் -தெரி
6 நானோஅவனையென் முதற்பேற்றுப் பிள்ளையும்
ராசரில்மேலுக்கு மேலுமாய்த் தாபிப்பேன்
நானேயவனுக்கென் தயவென்றுங் கர்த்தெனின்
நல்லுடம்படிக்கையை யுறுதியாக்குவேன் -தெரி
7 அவனுடைசந்ததி யிந்தமேல்வானத்தின்
அறுதிமட்டுக்கு முள்ள எக்காலமும்
அவனுடைறாச ஆசனத்துட்கார
அமைத்துஉறுதி யாகச் செய்குவேன் -தெரி
8 என்ஞாயங்கற்பனை தோறாபிரமாணம்
என்பதையவனுடை சந்ததிமீறினால்
என்னுடைவாதையாம் மிலாற்றினாலவர்கள்
இடும்பக்கிரமமு மொழியச் செய்குவேன் -தெரி
9 அப்படியிருந்தாலும் என்னுடைகிருபை
அவனைவிட்டென்றென்றும் விலகிடமாட்டாது
எப்போதும்என்னுடை உண்மையிலவனே
தப்பாமல்வந்திடச் செய்துவைப்பேனே -தெரி
10 என்னுடை உதடு சொல் வார்த்தையை மாற்றிடேன்
என்னுடம்படிக்கையைக் கொலைதிடமாட்டேன் நான்
என்னுடைதாவீ திடத்தில்ப் பொய் சொல்லேனென்
றென்பரிசுத்தத்தி லாணையுமிட்டிட்டேன் -தெரி
11 அவனுடைசந்ததி யென்றென்றுமிருக்குமே
அவனுடைசந்ததி யென்றென்றுமிருக்குமே
அவன்சிங்காசனஞ் சூரியன்போலவே
அமைத்துநின்றிடும் எனக்குமுன்பாக -தெரி
12 வாகானசந்திரன் போலவுமிங்கது
வலுத்தவுறுதியா யென்றென்றும் நின்றிடும்
ஆகாசமண்டலச் சாட்சியைப்போலவே
அதுமகாவுண்மையா யிருக்குமிருக்குமே -தெரி
5 வது பங்கு வச.38 – 45
சயிந்தவி ரூபகதாளம்
1 எங்களைநீரிப்போ வெறுத்துவிட்டீர்
இராசபட்டாபிசேகம் பெற்றோன்
பங்கப்படஉமது கடுஞ்சினத்தைப்
பலக்கஅவன் மேலே தாக்கிவிட்டீர்
2 உமதுதாசனுக் குறுதிசெய்த
உடம்படிக்கையை யறுவருத்தீர்
அமைதிக்கிரீடத்தைக் தரையில்த் தள்ளி
அதையும் பரிசுத்த குலைச்சல்செய்தீர்
3 அவனின்மதிலெல்லாந் தகர்த்துவிட்டீர்
அவனினரணிப்பை யிடித்துவிட்டீர்
அவனைவழிபோக்க ரனைவர்களும்
அவதியாய்க்கொள்ளை யடிக்கச்செய்தீர்
4 அவனையிப்படி யவனுடைய
அயலார்நிந்தனை செய்ய வைத்தீர்
அவனின் பகைஞர்கள் வலது கையை
அவனுக்குயரமா யிருக்க வைத்தீர்
5 அவனின்விரோதிக ளனைவரையும்
அதினாலானந்த மாக்கிவைத்தீர்
அவன் தன்னுயித்தத்தில்த் தரிகொள்ளாமல்
அவன்வாள்க்கூர்மையை மளுக்கிவிட்டீர்
6 அவன்ராசானந் தரையில்த்தள்ளி
அவனின் துப்பர வொழிய வைத்தீர்
அவனினிளமைநாள் தனைக்குறுக்கி
அவனைவெட்கத்தால் மூடிவிட்டீர்
6 வது பங்கு வச.46 – 52
கலிப்பா
1 இதுஎந்தமட்டு நிற்கும்
என்றும் மறைந்துகொள்வீரோ
எதுமட்டுக்கும் உமது கோபம்
எரியுந்தீச் சுவாலையைப்போல்
2 என்சீவன் நிலையற்றதே
யென்பதைநீர் நினைத்தருளும்
மண்மனுசர் யாவரையும்
வம்பாக ஏன் படைத்தீர்
3 எந்தமனுசன் சாகாமல்
தன்சீவன் பாதள
செந்தீவல் லிடிக்கலச்
செய்திங்கே வாழ்ந்திடுவான்
4 தாவீதுக்குண்மையுடன்
சத்தியங்கள் செய்தஉமது
பூர்வீகக் கிருபையெங்கே
போய்விட்டது ஆண்டவரே
5 பகைவர் உமதுதாசனான
பட்டத்து மானிடனை
இகழ்ந்துநிந்தை செய்குவதை
என்தெய்வமே நினைத்தருளும்
6 வெகு சனங்கள் பாரமெல்லாம்
மேல்ப்போட்டதா லென்மேல்வந்த
இகழ்ச்சிநினையும் என்சுவாமீ
என்றுந் துதியேற்பவரே
7 ஆமன் ஆமன் என்றென்றைக்கும்
ஆண்டவர்க்குத் தோத்திரமே
ஆமன் ஆமன் என்றென்றைக்கும்
ஆண்டவர்க்குத் தோத்திரமே