88 சங்கீதம்
88 சங்கீதம்
1 வது பங்கு வச.1 – 8
வெண்பா
1 எசுராகியனான ஏத்தானோ கோராச்
சிசுக்களிலோ ராகச் சிரேஷ்டர் இசையில்ப்
படிக்கத்தன் நோயாம் பலக்குறைவில்ப் பாடி
விடுத்ததாம் போதகத்தின் பாட்டு
2 என்னை யிரட்சிக்கும் ஏகோவா தெய்வமே
என்மன்றாட்டும்முடையமுன்வரட்டும் என்னுடைய
கூப்பா டுமதுசெவி கொள்ளட்டும் ராப்பகலாய்
கூப்பிடுகிறேன் உம்மைநோக்கி
நாகவராளி ஆதிதாளம்
என்னாத்மம் தீங்குகளினால் நிரம்பிப்போச்சே
என்னாத்மம் தீங்குகளினால்
1 என்சீவன்பா தாளத்தின் இடத்திக்குச்சமீபமாய்
சென்றதால்குழியில்வைக்குஞ்
செத்தவன்போலேயானேன் -என்
2 திடனற்ற மனுசன்போலானேன் உயிரிழந்து
செத்தவோர் மனிதன் போலானேன்
படுகளத் துமதுகையால்ப் பட்டறுந்தழிகுழியி
லிடப்பட்ட பிணத்தைப்போல்நான்
இகழ்ச்சிக்குள் ளாகிவிட்டேன் -என்
3 என்னைநீர் தாழ்வுக்குழியிலும் ஆழங்களிலும்
இருளிலும் வைத்துவிட்டீரே
என்னையிங்குமதுகோபம் இருத்துதேஉமதுவெள்ளம்
எல்லாமென் மேல்ப் புறண்டு
இடுக்கமுண் டாகவைத்தீர் -என்
4 அறிமுகக் காரரேயென்னை யருவருத்து
அகன்றுதூரப் போகச்செய்தீரே
புறப்பட்டுவெளியேற்றத்துப்புகலில்லா தடைபட்டுப்
புறண்டேனென் கண்கள் தொய்ந்து
போயிற்றுநோயினாலே -என்
2 வது பங்கு வச.9 – 28
கலிப்பா
1 அனுதினமும் உமைநோக்கி
அபையமிடுவேன் என்சுவாமி!
எனதுகையை உமக்குநேரே
ஏந்திவிரித்துக் கெஞ்சுகிறேன்
2 மரித்தோர்க்குள் அதிசயத்தின்
வல்லமைகள் செய்வீரோ
மரித்துப்போன வல்லோர்தம்
வலுவாலும்மைத் துதிப்பார்களோ
3 கிருபையுண்மை யழிபிரேதக்
குழியில்விளம்பப் பட்டிடுமோ
இருளிலு ததிசயங்கள்
எல்லாமறியப் பட்டிடுமோ
4 மறதியின்பூமியிலே
உமதுநீதி தெரிந்திடுமோ
முறையம்வைத்தேன் உமக்குமுன்என்
மூறைப்பாடுமக்கு முன்வருமே
5 என தாத்மம் உம்மையண்டா
தேன்தள்ளுறீர் என்சாமீ!
எனக்குமது சமுகத்தையும்
ஏன்மறைத்துக் கொள்ளுகிறீர்
6 சிறுவயசு தெடங்கியேநான்
சிறுமைப்பட்டோன் மாண்டிடுவோன்
அருட்டிபிடித்தும்மையிட்டு
அஞ்சியஞ்சித் திரிந்தோன் நான்
7 உம்முடைய எரிச்சல்களும்
என்மேலே கடந்திடுமே
உம்முடைய பயங்கரங்கள்
என்மேல்ச்சா வாகவரும்
8 தண்ணீர்போ லதுகளென்னைச்
சார்ந்துசுற்றும் நாள்தோறும்
என்னையது தினந்தினமும்
ஏகமாய்ச் சூழ்கிறதே
9 உரிமைக்காரர் தோழரென்னை
யொதுக்கிநீங்கச் செய்தீரே
அறிமுகத்தோர் எனைக்கைவிட்டு
அந்தரங்க மானார்கள்