87 சங்கீதம்
87 சங்கீதம்
குறள்-குப்பமாய்ப் பாடிவந்த கோராகின் புத்திரர்க்கு
ஒப்புவித்த சங்கீதப் பாட்டு
பரிசுத்த பற்வதத்தில்ப் பாரஸ்திவாரம்
இருக்கவைத்த ஏகொவா யாக்கோ பரண்பதிகள்
எல்லாஅரணைவிட இஷ்டசீயோன் மெய்த்தலத்தை
நல்லாச் சிநேகிக்கிறார்
துசாவந்தி ஆதிதாளம்
மாதெய்வ பட்டணமே மகிமைவிசேடங்கள்
வகையாக உன்னிடத்தில் வசனிக்கப்பட்டிருக்கும்
1 ஆதிமுத லிசராவேல்
அறிந்த எகிப்துத் தேசம்
அந்தப்பாபிலோன் நாடுங்கூடவே
முந்தஉன் நினைப்பாகும் – மாதெய்வ
2 பெலிஸ்தர்களும் தீறியரும் கூஷியருங்கூட
பெலமாயிருந் துன்னிடத்தில்ப்
பிறந்துயர்ந்தா ரென்றும்
கலித்திசராவேலிலின்னான்இவன் பிறந்தானென்றும்
கலிப்பாகச் சீயோனின் கணிசஞ்சொல்லப்படுமே
பெலத்துடனே யதுவிளங்கப்
பேணிக்கொண்டே யிருக்கும்
பெருத்த உன்னத மான தெய்வமாம்
கருத்த ருன்னுடை தஞ்சமே – மாதெய்வ
3 இன்னின்னார் இதில்ப்பிறந்தார் என்றேவகையுடனே
எழுதிவைத்த கணக்கதினால் ஏகமொத்தமாக
உன்னதராங் கற்தர்தமக் குதந்தசபைச் சனத்தை
ஒவ்வொருத்த ராகஎண்ணி ஒக்கத் தொகையிடுவார்
உன்னிடத்திலெங்களுடை ஊற்றெல்லாமுண்டென்றே
உகந்துதுள்ளியே உச்சாகத்துடன்
மகிழ்ந்துபாடிடுவார்கள் – மாதெய்வ