86 சங்கீதம்
86 சங்கீதம்
தாவீதின் விண்ணப்பம்;
1 வது பங்கு வச.1 – 7
காம்போதி சாபுதாளம்
என்னுடைய விண்ணப்பத்தைக் கேளுமே
உம்முடைய செவிசாய்த்
தென்னுடைய விண்ணப்பத்தைக் கேளுமே
1 என்எகொவா நானோசிறுமை எளிமையுமுள்ளவனே
என்காரியம் அனாமத்து என்னுயிரைக்காத்தருளும் -என்
2 என்தெய்வமே உம்மைநம்பியிருக்கிற உம்முடைய அடியான்
என்னைரட்சித்தெனக்கு இரக்கஞ்செய்யுமே
என்னுடையஆண்டவரே எந்தநாளும்உம்மைநோக்கி
மன்றாடுகிறேனென்னுயிர்
மகிழ்ச்சியாகச்செய்தருளும் -என்
3 ஆண்டவா நீர் நல்லோர் மன்னிப் பருள்வோர்
ஆம் உம்மை நோக்கி
அபையம்வைப்போ ரெவர்க்குந்தயை மிகுத்தோர்
ஆண்டவரே உம்மண்டைக்கே
அதினாலென்னாத்துமாவை
மீண்டும் உயரப்பண்ணுகிறேன்
மீண்டும் உயரப்பண்ணுகிறேன் -என்
4 என்செபத்தைச்செவிகொடுத்துக்கேளும் ஆ! எகோவாவே
என்விண்ணப்பச் சத்தங்கவனித்தருளும்
என்னிக்கட்டு நாளிலும்மை
யேறிட்டுநான் கூப்பிடுவேன்
எனக்குமறு மொழி கொடுப்பீர்
எனக்குமறு மொழி கொடுப்பீர் -என்
2 வது பங்கு வச.8 – 13.
உமதுநற்செயல்களுக்கு ஒப்பில்லை ஆண்டவரே
உமக்குநிகர் யாருமில்லை உயர்வானதேவர்க்குள்ளும்
1 உமக்குமுன் நீர்படைத்த
உலகத்துச்சாதியெல்லாம்
உமதுநாம மகிமைவிளங்க
நமஸ்காரம்பண்ணுவார்கள் -உமது
2 பெரியவர் அதிசயத்தைப்
பிறப்பிப்பவர்நீரே
ஒருவர்நீரே தெய்வம் எங்கும்
உமையன்றி யாருமில்லை -உமது
3 உம்முடைசத்தியத்தில்ச்
செம்மையாய் நடப்பதுக்கு
உம்முடைய வழியையெனக்கு
உறுதியாய்ப்போதிவியும் -உமது
4 உமதுநல்நாமத்துக்கு
ஒஞ்சியேநடப்பதுக்கு
எனதுமனசு ஒருவாக்காக
இருந்திடச்செய்தருளும் -உமது
5 பரனேநான் என்றும் உம்மைப்
பத்தியாய்த் துதித்துக்கொண்டு
முழுநெஞ்சாலும் உமதுநாம
முக்கியஞ் சொல்லிடுவேன் -உமது
6 என்மேலேபெரியதல்லோ
உம்முடைகிருபைச்செயல்
என்வாணாலை நரகக்கிடங்குக்
கிடைந்திப்போவிலகச்செய்தீர் -உமது
3 வது பங்கு வச.14 – 17.
வெண்பா
தெய்வமே வீண்பெருமைக்
காரரென்னைத் தெம்பித்துக்
கைபெலத்தோர் கூட்டமெந்தன்
காப்புயிரைப் பைய
ஒடுக்க வகைதேடி
உம்மைத்தம் முன்நிறுத்தி
அடுக்கா திருக்கிறார்களே
எதுகுலகாம்போதி ஆதிதாளம்
பரணாம்எந்தன் ஆண்டவரே
1 கிருபையுண்மை நீண்டசாந்தம்
இரக்கம்நெஞ்சுருக்கமும் பெருக்கமாயுள்ள -பர
2 என்மேல்நோக்கங் கொண்டெனக்கிரங்கும்
உம்முடைபெலனை உவந்தெனக்கருளும் -பர
3 நானுமதடியாள் நட்புடன்பெற்ற
ஈனமாங்குமாரன் என்னைநீர்ரட்சியும் -பர
4 என்னைத்தேற்றிநீர் எனக்கொத்தாசைகள்
பண்ணுவோரென்றென் பகைஞர்கள்வெட்க
என்னிடம்சுவாமிநீர் எனக்கடையாளம்
ஒன்றுசெய்தருளும் உறுதியின்நலமாய் -பர