83 சங்கீதம்
83 சங்கீதம்
அகவல்:ஆசாபின் சங்கீத மாகிய பாட்டே
கலிப்பா
1 சுவாமியாந் தெய்வமேநீர்
சும்மாநீ ரிராதேயும்
சுவாமிநீர் மவுனமுற்றுச்
சும்மாயே யிராதேயும்
2 உம்முடைய சத்துருக்கள்
உக்கிரமாய்க் கொந்தளித்து
உம்முடைய பகையாளிகள்
உயர்த்தினார்கள் தம்தலையை
3 சற்பனையா யும்முடைய
சனத்தையழிக்க நினைவுகொண்டு
தற்பரன் சார் படைந்தோரைத்
தாக்கயோசிப்பெடுத்தார்கள்
4 இசரவேல் பேரை முற்றும்
எடுத்திடுவோ மென்றார்கள்
அசுப்பிலவர்கள் சாதியின்பே
ரறச்செய்வோ மென்றார்கள்
5 இசுமவேலர் கேபாலியர்
ஏதோமின் கூடாரத்தார்
அசுவத்தின் மோவாபியர்
ஆகாரியர் தாமும்வர
6 தீருக்குடிச் சனங்களுடன்
சேர்ந்தனறே பெலிஸ்தர்களும்
பேரம்மோன் ஆமலேக்கும்
பிரண்டெழுந்து சேர்ந்தார்கள்
7 அவக்கெனக்கு ஒன்றுகூடி
ஆலோசனை மிகவும் பண்ணி
உமக்கெதிரா யவர்களொரு
ஒப்பந்தமே செய்தார்கள்
8 அசுரரெழும்பி வந்து நின்று
அவர்களுடன் கலந்துகொண்டு
மசகுலோத்து மக்களுக்கு
வல்லபுய மானார்கள்
9 மீதியானர் போலவர்கள்
வெட்டுப்படச் செய்தருளும்
மீதியானர் போலவர்கள்
வெட்டுப்படச் செய்தருளும்
10 கீசோன்நதி யேந்தோரண்டை
சீசோரா யாபீன்போல்ச்
செத்தொழியச் செய்தருளும்
11 அவர்கள் தம் மரசருடன்
அழியட்டுஞ் சேப் போரேப்போல்
சவமாகட்டு மவர்கள்தலைவர்
சல்மூனா சேபாப்போல்
12 மாண்புகொண்ட தெய்வத்துடை
வாசஸ்தல அரண்களை நாம்
காண்போம் சுதந்திரமாய்த்
கட்டிக்கொள்வோ மென்றார்கள்
13 சுழல்க்காற்றுப் புழுதிபோலும்
துரும்புபோலு மவர்களை நீர்
எழும்பியே பறந்தோடச்
செய்தருளும் என்தெய்வமே
14 தீகாட்டைச் சுட்டெரித்து
திறண்டமலை மரத்தையெல்லாம்
போக்குவது போலவர்கள்
பொசுங்கியழியச் செய்தருளும்
15 உமதுபுச லவர்களையே
ஒடுக்கித்தொடரச் செய்தருளும்
உமதுபெருங் காற்றாலே
ஒஞ்சச்செய்யு மவர்களை நீர்
16 அவர்களுமது நாமநிலைக்
கஞ்சித்தேட்டங் கொண்டிருக்க
அவர்கள்முகங் கனஈன
மாகமூடச் செய்தருளும்
17 சாமியென்ப தும்முடைய
தயைநிலையின் தனிநாமம்
பூமியனைத்தின் மேலேயும்
புகழுயர்ந்தோர் ஆண்டவர்நீர்
18 இதையவர்க ளறிந்திடவே
என்றும்வெட்கி நாணிடட்டும்
இதையவர்க ளுணர் ந்துகொள்ள
என்றும் நாணி யழிந்திடட்டும்