82 சங்கீதம்
82 சங்கீதம்
தாவீதின் சங்கீதம்
விருத்தம் (துள்ளல்)
1 ஞாயசபைதன்னிலே நாயன் நின்றிருக்கிறார்
ஞாயத்தலைவர் தம்மையும்
ஞாயங்கேட்டுநிற்கிறார்
ஞாயக்கேடாயெந்தமட்டும் ஞாயந்தீர்ப்பீரென்கிறார்
வாய்வீணர்கள் முகத்தையெந்த
மட்டும் பார்ப்பீரென்கிறார்
2 தரித்திரன் திக்கற்றோன்ஞாயஞ்
சரியாய்ச்செய்ங்களென்கிறார்
சிறுத்தஏழை தனக்குஞாயஞ்
செய்திடுங்க ளென்கிறார்
தரித்திரன் திக்கற்றோன்தன்னைத்
தப்பவைங்களென்கிறார்
தருக்கியவனைவம்பன்கைக்குத்
தப்பவைங்களென்கிறார்
3 இதையறிந்துணர்ந்திடாம லிருக்கிறார்களென்கிறார்
சிதைவுசெய்யுமிருட்பிடித்துத்
திரிகிறார்களென்கிறார்
அதுகளாலே நாட்டிலுள்ள
அஸ்திபாரமூலங்கள்
உதிருமண்ணைப்போலேயெல்லாம்
உழன்றுநிற்குதென்கிறார்
4 நீங்கள்தேவர்உயர்ந்தோர் மக்கள்
என்றுநாமேநிகழ்த்தியும்
நிங்கள் மனுசர்பூவேந்தர்க்கு
நிகராயழிவீரென்கிறார்
ஆம் ! கற்தர்நீர் எழுந்திருந்து
அவனிஞாயந்தீர்த்திடும்
சாங்கோபாங்கச் சுதந்திரமாய்ச்
சாதியையெல்லாம் ஆளுவீர்