80 சங்கீதம்
80 சங்கீதம்
குறள்-ஆறுதந்திச் சாட்சியினால்ச் செய்திசொல்ல ஆசாபு
மேல் ராகத் தோற்கமைத்த பாட்டு
1 வது பங்கு வச.1 – 3
காமாசு ஆதிதாளம்
இசராவேல்மேய்ப்பரே செவிகொடுத்திடும்
இசராவேல் மேய்ப்பரே
1 யொஸ்சேப்பையாட்டுமந்தைக்
கொப்பாக நடத்துவோரே
பசும்பொன்னின் கெரூபின்மேலே
வசிப்போரே பிரகாசியும் – இசரா
2 பென்யமீன் எப்பிராயீம்
மனாசேக்குமுன் உமது
வன்மையை யெழுப்பியெங்கள்
மகிமைமீட்பாக வாரும் – இசரா
3 தெய்வமே யெங்களை நீர்
திருப்பியே கொணர்ந்துமது
மெய்ஒளி வருளுமப்போ
மீட்பையு மடைந்திடுவோம் – இசரா
2 வது பங்கு வச. 4 – 19
1 சேனைத்தெய்வ மான சுவாமி
தேவரீர் எந்தமட்டும்
தீனப்படும் எமதுசனச்
செபங்கேளாமல்ப் புகைந்திடுவீர்
2 அவர்களுக்குக் கண்ணீரே
அப்பம்அதிகப் பேரளவாம்
அவர்கள்கண்ணீர் குடித்திடவும்
ஆபத்திழுத்து விட்டீரே
3 எங்களலயலார்க் கெங்களை நீர்
இழுக்காக வைத்தீரே
எங்கள்பகைஞர் தமக்குள்எம்மை
இகழ்ச்சிகேலி செய்கிறார்கள்
4 சேனைச்சுவாமி எங்களை நீர்
திருப்பிக் கொணர்ந் துமதுமுக
ஞானவொளி வெமக்கருளூம்
நாங்களப்போ ஈடேறுவோம்
5 கொடிமுந்திரிகைச் செடியோன்றைநீர்
கொணர்ந்தீர்எகிப்து நாட்டைவிட்டு
அடிச்சுப் புறச் சாதிகளை
யகற்றியதை நாட்டி வைத்தீர்
6 அதுக்குமுன்னே யிடமாக்கி
அதுவேர்ப்போடச் செய்துவைத்தீர்
அதுநாட்டைச் சூழமலைகள்
அதின் நிழலால் மூடுண்டது
7 அதின்கொப்புகள் கேதுர்போல
அதின்கொடிகள் கடல்மட்டுக்கும்
அதின்கிளைகள் நதிமட்டுக்கும்
அடர்ந்துபெல மாகினதே
8 இப்போததை வழிநடக்கும்
யாவருமே ஒடித்துவிட
தற்பராநீர் அதினடைப்பைத்
தள்ளியே தகர்த்ததென்ன
9 கான்பன்றி கிண்டுததை
காட்டுமிருகம் மேயுததை
சேனைச்சுவாமி திரும்பிவாரும்
வானத்திலிருந்து கண்ணோக்கும்
10 வலதுகரத்தால் நீர் நாட்டி
வைத்தகிளையைக் கொடியையுமே
உமதேற்பாட்டு மகன் நிமித்தம்
உற்றுவிசாரித் தருளுமிப்போ
11 அமராத்தீயா வழிந்ததுவே
அதுவெட்டுண்டும் போயிற்றுதே
உமதுசமுக உதம்புதலால்
ஒய்ந்தழிந்து போகிறார்கள்
12 வலபாரிசத்தாள் மேலுநீர்
வைத்தமனுஷக் குமாரன் மேலும்
பலக்கஉமது கரமிருக்கப்
பண்ணுமப்போ உம்மைவிட்டு
13 நாங்கள்விலகோம் எங்களுக்கு
நல்லுயிரைத் தாருமப்போ
சாங்கமாய் உமதுநாமந்
தன்னைச்சொல்லித் தொழுதுகொள்வோம்
14 சேனைச்சுவாமி யெங்களைநீர்
திருப்பிக்கொணர்ந்துமதுமுக
ஞானவொளி வெமக்கருளும்
நாங்களப்போ ஈடேறுவோம்