8 சங்கீதம்
8 சங்கீதம்
குறள் – கீதத்தில் வாசிக்க ராகத்தலைவனுக்கு
வீதித்த தாவீதின் பாட்டு
நாதநாமக்கிரியை ஆதிதாளம்
எத்தனை மகிமையுமதுநாமம் பூமி
யெங்கும்எங்கள் சுவாமியெகோவாவே
1 வற்தனையானஉமது மகத்துவம் பர
மண்டலங்கள்மேலுமுயரச்செய்தீர் – ஆ – எத்த
2 பழிகாரன்சத்துருவைஒய உமது
பகைஞர்கள் நிமித்தமாகச் சின்னக்
குழந்தைகள் பாலகர்கள் வாயால்ப் பெலன்
கொடுத்திங்கேநடந்தேறச்செய்தீர் – ஆ – எத்த
3 உம்முடையவிரல்ச்செயலாம்வானம் நிலவு
உடுக்களாம்நட்சத்திரங்கள் தானும்
உம்முடைபொருளெனநான் பார்த்தே அதுகள்
ஒவ்வொன்றும் ஆராய்ந்திடும்போது – ஆ – எத்த
4 மனுசனைநீர் நினைக்கும்படிக்கும் மனுசன்
மகனைநீர்நோக்கிப் பார்க்க்கும்படிக்கும்
அணுதூசியான அவன் தகுதி யுள்ளோன்
அல்லஎன்றெண்ணியறிக்கை செய்தேன் – ஆ – எத்த
5 சிறிதுநாள்த்தெய்வதூ தர்கும்பைப் பார்க்கச்
சிறியோனாய்நீரவனை வைத்தும்
மறுமையின் மகிமைகனத்தாலும் அவனை
மகுடாபிசேகஞ்செய்துவைத்தீர் – ஆ – எத்த
6 உம்முடைகைச்செயல்கள்மீ தில் அவனுக்
குறுதியாய் அளுகையைத் தந்தீர்
இம்மையின் ஆடுமாடுமுதலாம் எல்லாம்
இவனாண்டுகொண்டிருக்கச்செய்தீர் – ஆ – எத்த
7 ஆகாயப்பட்சிவெளியின் மிருகம் கடல்கள்
அனைத்திலும் நடமாடிய உருவும்
வாகாயவன்பாதத்துக்கீழா யடங்கி
வணக்கமாய்வாழ்ந்திருக்கச் செய்தீர் – ஆ – எத்த