79 சங்கீதம்
79 சங்கீதம்
ஆசாபின் சங்கீதம்
விருத்தம்
1 தெய்வமே புறச்சாதி உமதுசொத்தாம்
தேசத்தில் வந்துமதுசெபவிசேடத்
தெய்வசபை வீட்டைந்தீட் டாக்கியபால்ச்
செருசலேமை மண்மேடு மாக்கினார்கள்
ஜயையோ உமதூழ்யஞ் செய்வோர்தேகம்
ஆகாசப் பட்சிதின்கச் செய்திட்டார்கள்
தெய்வநல விசேடத்தோர் மாங்கிசத்தை
தீழ்ப்பான மிருகஇரை யாக்கினார்கள்
2 இவர்களுடை உடல்களிலே யுள்ள ரத்தம்
எருசலேஞ் சுற்றியெல்லாந் தண்ணீர்போல
அவமாகச் சிந்துண்ட சிறுமையல்லால்
அவர்களையும் எடுத்துப்புதைத் திடுவாரில்லை
அவமான மகாஎங்க ளயலார்முன்னே
யாகினோம் எங்கள் சுற்றுப் புறத்திலுள்ளோர்
தவிக்கும்எம்மைப் பரியாசமாகப் பார்த்துச்
சக்கந்தஞ் செய்கிறார்கள் சாமீபாரும்
கலிப்பா
1 எந்தமட்டும் சுவாமீ ! என்றும்
எரிச்சலாயிருப்பீரோ
எந்தமட்டும் உமதுகோபம்
எரிந்தெழும்புந் தீப்போல
2 உம்மையறியாய்ச் சாதியின்மேல்
உமதுநாமந் தொழுதுகொள்ள
கும்மல்ராஜ்யச் சனங்களின் மேல்க்
கோபத்தை யூற்றிவிடும்
3 யாக்கோபைப் பட்சித்தவன்
நாட்டுப்புறக் குடியிருப்பை
ஆக்கிரமத்தா லவர்கள் கெடுத்த
அக்ரமத்தை நினைத்தருளும்
4 எங்கள்முன்னாள்த் தீவினையை
இப்போது நினையாமல்
எங்களுக்குத் தீவிரமாய்
இரக்கங்கள் செய்தருளும்
5 நாங்கள்மெத்தக் குறுகிவிட்டோம்
ரட்சித்தருளுங் கற்தாவே
நாங்கள்மெத்தக் குறுகிவிட்டோம்
ரட்சித்தருளுங் கற்தாவே
6 உமதுநாம மகிமைக்கென்று
ஒத்தாசை யெமக்கருளி
எமதுபாவம் நிவர்த்திசெய்து
எங்களை நீர் தப்பவையும்
7 அவர்கள் தெய்வ மெங்கேயென்று
அந்யசாதி சொல்வானேன்
அவர்கள் தெய்மெங்கேயெனறு
அந்யசாதி சொல்வானேன்
8 உமதூழ்யக் காரருடை
உதிரஞ்சிந்தும் ரெத்தப்பழி
எமதுகண்முன் சாதிகட்குள்
இசைவாகத் தெரிந்திடட்டும்
9 கட்டுண்டோன் பெருமூச்சுக்
காணப்படட்டும் உமக்குமுன்னே
வெட்டுப்படக் குறித்தோரை
விடுவித்தருளும் புயபெலத்தால்
10 ஆண்டவரே உம்மையெங்கள்
அயலார்கள் செய்த நிந்தை
மீண்டிடட்டும் ஏழத்தனை
விவத்தாயவர்கள் மடிதனிலே
11 உமதுமந்தை யான நாங்கள்
உம்மையென்றும் புகழ்வமப்போ
உமதுதுதி சொல்லிவருவோம்
உவந்துவம்ச வழி வழியாய்