78 சங்கீதம்
78 சங்கீதம்
ஆசாபின் போதக சங்கீதம்
விருத்தம்
1 என்சனமேஎன்னுடைய உபதேசத்தை
என்வாய்ச்சொல்லுடனேகேட்டுணர்ந்திடுங்கள்
எனவாயால்உவமைகளை விண்டுசொல்வேன்
எங்களுடைமூதாக்கள் சொல்லிவைத்த
முன்காலப் புதைபொருள் நாணறியக்கேட்ட
முறைப்படியே உங்களுக்குச் சொல்லிவைப்பேன்
பின்னோர்க்குச் சுவாமிபுகழ் பெலன்புதினம்
பிறட்டாமல் மறைக்காமல்த் தெரியவைப்போம்
2 யாக்கோபில் ஏடூத்தை யேற்படுத்தி
நாட்டினார்தோறாவை யிசரவேலில்
மூர்க்கராங் கலகத்தின் முன்னோர்போல்ப்பின்
முளைக்கும் பிற்கிளைதெய்வ செயல்மறவா
தேற்கனவே யவர்மேலே பற்றமாக
எகோவாவின் கட்டளைகைக் கொள்ளநோக்குந்
தாக்கமாய்ப் பிள்ளைகட்குத் தகப்பன்மார்கள்
சரிப்படுத்திக் காட்டிவிடச் சாமிசொன்னார்
3 இதயநலம் விரும்பாத சந்ததியா
யிருந்தார்கள் அவர்களந்தக் காலஞ் சாமிக்
கெதார்த்தமா மனசுடனே யிருந்திட்டார்கள்
ஈனமா யலைந்தார்கள் மடிந்திட்டார்கள்
அதுபோல எப்ராயீம் புத்திரர்கள்
ஆயுதமும் வில்லுகளு மணிந்திருந்தும்
ததிஉயித்த நாளினில்த் தோற்றோடிப்போன
சங்கதியா லவர்களுக்குச் சரியானார்கள்
4 தெய்வஉடம் படிக்கைதனைக் கைக்கொள்ளாமல்த்
திமிறியவர் தோறாவைத் தள்ளிவிட்டு
மெய்ருசுவாய்க் கண்டஅவ ரதிசெயுங்கள்
மேலான செயல்களையு மறந்திட்டார்கள்
கைமெய்யாய் அவர்கள்மூ தாக்கள் கண்முன்
காம்தேச எகிப்பத்துச் சோகானூரில்ச்
செய்தஅவ ரதிசெயத்தின் திரளைத்தானுஞ்
சிந்தையிலே வைக்காமல் மறந்திட்டார்கள்
5 கடல்பிளந்து நீர்மதில்போல்க் குவிந்துநிற்க
கடத்தினார் அவர்களையக் கரையில்ச் சேர்த்தார்
நடத்தினார் பகல்மேகத் தூணினாலே
ராத்திரியில்ச் சுவாலையொளி வழிபோனார்கள்
திடமான கன்மலைகள் பிளந்துதண்ணீர்
திரள்த்திரளா யாறுகளா யோடவிட்டு
இடம்பெறவே யவர்களுக்குத் தாகமில்லா
திருக்கஅந்த வனத்தில்வகை செய்திட்டாரே
6 இத்தனையாய்த் தெயவம் நன்மை செய்திட்டாலும்
இன்னமவர்க் கேற்காத பாவஞ்செய்து
கற்தருடைகோபமந்தக் காட்டில்மூளக்
காரணமாய்சாப்பாட்டைத் தம்மனம்போல்
அத்துமீறிக்கேட்டுத் தங்க ளிருதயத்தில்
அவர்தயவின்மகத்துவத்தைப் பரிட்சைபார்த்து
புத்திகெட்டுத் தெய்வத்துக்குஏற்காக் கேள்வி
பொல்லாதவாயாலே கேட்டிட்டார்கள்
7 இந்தவனாந்தரத்திலந்தச் சனங்களுக்கு
ஏற்றதீதினிதெய்வத்தால் வருவதுண்டோ
இந்தா! கன்மலையையவ ரடித்துத்தண்ணீர்
எழும்பியதிலிருந்துதண்ணீர் புறண்டதாச்சே
அந்தவகையாகஅவர் சனங்களுக்குள்
அப்பந்திரளாக இங்கே வருமோசீவ
செந்துக்களின் மாங்கிசமும் வருமோஎன்று
திடநம்பிக்கையில்லாமல்க் கேட்டிட்டார்கள்
8 தெய்வங்கடைதலைகாப்பா ரென்றுநம்பாச்
சீர்கேட்டாலிசரவேல் யாக்கோபென்ற
அவ்வங்கிகச் சனத்தார்மேத் தெய்வகோபம்
அக்கினியாயெரிந்தெழும்பி வாதையாச்சு
அவ்வாதைவருமுன்வான் மேகத்தையும்
அந்தரத்தின் வாசலையுந் திறந்துமன்னார்
செவ்வையாய் நித்தம்நித்தம் பெய்யச்செய்த
செயல்நடப்புந் தெரியாதோரவர்களல்ல
9 வானவுணவ வர்களங்கே பெற்றிட்டார்கள்
வல்லவர்களப்பமவ னவன்சாப்பிட்டான்
காணும்படி பூரணமா யாகாரத்தைக்
கற்தரந்தநரர்க்கனுப்பி ஆகாயத்தில்
ஞானமாய்வலுகரிச்சான் தென்றல்க்காற்றால்
நல்லிறைச்சி காடைப்பட்சி பெருந்திரளாட
வேணுமென்றமட்டில்நடுப் பாளயமும்
வெளியில்நாலட்டுமுமாய்க் குவியச்செய்தார்
10 அவர்களதைப்பொசித்துமிகத் திருத்தியாக
ஆசைகெண்டமட்டுமதைச் சுவாமிதந்தும்
அவர்கள்தங்கள் சோக்காசைபொல்லாதென்று
அனுவளவும் அருவருக்கா திருந்ததாலே
அவர்கள்தின்ற தீன்வாயி லிருக்கும்போதே
அவர்கள்மேல்த் தெய்வமெப்ப மெழும்பியந்தச்
சவையிசரவேல்மக்களில்த் தாக்குள்ளோர்மேல்ச்
சங்காரம் நேர்ந்தவர்கள் மடிந்திட்டார்கள்
11 இம்மட்டுமேஎல்லாமோ நடந்திருந்தும்
இவர்களின்னம் அவருடையஅதிசயத்தை
நம்பாமல்த்தெய்வத்துக்கு எதிராய்ப்பாவம்
நடப்பித்துமனக்கடினஞ் சாதித்தார்கள்
அம்முகாந்தரத்தாலே அவர்கள்வாழ்நாள்
அவமாகமாய்கையிலே கழியச்செய்தார்
ரெம்பவோ பயங்கரமா யவர்களாண்டு
நிற்பாக்ய மாய்க்கழியச் செய்திட்டாரே
12 கொல்லும்போ தவர்சமுகங் கருத்தாய்த்தேடி
குணப்பட்டோர் போலநின்று வருந்தினார்கள்
கல்மலையும் மீட்பருமாம் உன்னதராங்
கற்தாவையிருதயத்தில் நினைவுகூர்ந்து
பொல்லாத இச்சகங்கள் வாயால்ப்பேசி
புறட்டான நாவினால்ப் பொய்யைச்சொல்லி
நல்மனமாய் உண்மையுமா யுடம்படிக்கை
நாடியவரோடிணங்கா திருந்திட்டார்கள்
13 இரக்கமா யவர்களுக்குப் பொறுமைகாட்டி
இதற்கெல்லா மவர்களைவேரறுத்திடாமல்
உருக்கமா யக்ரமத்தை மூடியெல்லா
உக்கிரமுமெழும்பாம லமர்த்திக்கொண்டு
திரும்பிவராக் காற்றுச்சேர் மாம்சமென்று
தெய்வமந்த நரரை நினைந் தநேகமான
தருணத்தில்த் தமதுவெப்பம் விலக்கியந்தச்
சனங்களையவ் வனாந்தரத்தில் கடத்தினாரே
14 எத்தனையோ தெரமவரைப் பரிட்சைபார்த்து
இசரவேல்ச் சனத்தின்பரி சுத்தரான
கற்தாவை யாழம் பார்த் தந்தக் காட்டில்
கடுங்கோபம் மனநோவு மவர்க்குண்டாக்கி
சத்துருக்கள் கைக்ககற்றி எகிப்பத்தேசத்
தலைநகராஞ் சோகானூர் வெளியில்ச்செய்த
சத்துவமாம் புதுமைகண்ட அடையாளநாள்
தனைமறந்து நினையாதே போய்விட்டார்கள்
15 அவர்கள்நதி யாறுகளை இரத்தமாக்கி
அதுகளில்த்தண் ணீர்குடிக்கா திருக்கச்செய்தார்
அவர்களுடலரிக்கும்வண்டுத் திரளனுப்பி
அவர்களுக்குக் கெடுதியாய்த் தவளைவிட்டார்
அவர்கள்பயிர்ப் பலனைப்பச்சைப் புழுக்களுக்கும்
அழிக்கும்வெட்டுக் கிளிகளுக்கு மொப்புவித்தார்
அவர்கள்முசுக் கட்டைகொடி முந்திரியை
ஆலங்கட்டி கன்மழையா லழித்துவிட்டார்
16 அவர்களுடை மிருகங்கள் மழையினாலும்
ஆடுமா டிடியாலு மழியச்செய்தார்
அவர்களுக்குள்த் தமதுக்ரங் கோபம்மூர்க்கம்
அழிவுத்தூத ரிடுக்கத்தையும் போகவிட்டார்
அவர்களுயிர் பெருவாரிக் காய்ச்சலுக்கும்
அவர்களான்மா மரணத்தின் வல்லமைக்கும்
தவறாம லகப்பட்டு மாளச்செய்தார்
சரிப்பிடித்தார் தாமிதுசெய் வதற்குஞாயம்
17 எகிப்பத்தாங் காமுடைய கூடாரத்தின்
எந்தவித முதற்பிறப்பு மழியச்செய்து
மகிமையாய் மந்தைபோல்த் தம்சபையை
வனாந்தரத்துக் கங்கிருந்தே கொண்டுவந்து
திகிலில்லாப் பத்திரமாய் வழிநடத்தி
தெய்வமே ராப்பகலாய்க் கூடவந்தார்
பகைவரதைத் தடுத்திடப்பின் தொடர்ந்து சேனைப்
பலத்தோடே கடலாழத் தமிழ்ந்தினார்கள்
18 தம்முடைய பரிசுத்த எல்லையான
சவுக்கியமாம் கானான்நாட் டெல்லைக்குள்ளே
தம்முடைய வலதுகரஞ் சாம்பாதித்த
(சாலேமாம்) இந்தமலை மட்டுக்கும்மே
செம்மையாயவர்களையுங் கொண்டுவந்து
சேர்த்தவர்கள் முன்சனத்தைத் துரத்திவிட்டு
மும்மிசர்வேல்ச் சன்ஞ்சீட்டுப் படிக்கவர்கள்
கூடாரங் குடியிறங்கச் செய்திட்டாரே
19 செகத்திலிந்த நன்மைசெய்த உன்னதராந்
தெய்வத்தை யவர்கள் பின்னும் பரிட்சைப்பார்த்து
மகிழ்ச்சியா யவர்சாட்சி கைக்கொள்ளாமல்
வலுகோபம் மூட்டித் தங்கள் பிதிர்க்களைப்போல்
மிகையாக வழிவிலகித் துரோகம்பண்ணி
வில்த்ததியில் மோசமாய்ப் புறண்டாப்போல
விகல்ப்பமாய்ச் சுரூபங்கள் மேடைபண்ணி
வெகுஎரிச்சல் சுவாமிநெஞ்சில் வரச்செய்தார்கள்
20 தெய்வம்அதைக் கேள்வியிலே வைத்துரெம்பத்
தீக்கோபத் திசரவேல் தனைவெறுத்துத்
தெய்வாரா தனைக்கென்று சீலோவூரில்
சிறந்திட்ட கூடாரம் நெகிழ்ந்தவர்கள்
கைப்பெலனைச் சிறையிருப்பி லொப்புவித்துக்
கணிசத்தைச் சத்துருவின் கையிற்சேர்த்தார்
ஜயையோ தம்முடைய சனத்தைத் தெய்வம்
ஆகாதோர் பட்டயத்துக் கிரையாய்விட்டார்
21 அவர்தமது சுதந்தரத்தில்க் கோபங்கொள்ள
அவர்களுடை இளைஞரைத்தீ யெரிக்கலாச்சே
அவர்கன்னிப் பெண்கள் திரளதினால் வாழ்க்கை
யாகாம லிருந்திற்றுத் தவித்திட்டார்கள்
அவர்களுடை பூசாலிமார்களந்த
அந்நியரின் பட்டயத்தால் விழுந்திட்டார்கள்
அவர்களுடை விதவைகளோ பிரியன்மார்கள்
அறுந்தழிந்தும் அழுகைக்குரலெடுத்ததில்லை
22 அதின்பின்னே ஆண்டவரோ நித்திரைவிட் தான்போல
டதிர்ந்தெழுந்
விழித்தெழுந்துபார்த்தார்
மதுபானக் கெம்பீர வீரன்போல
மாற்றாரைப் பின்புறமா யடிபடுத்திச்
சிதைவாக்கி யவர்களுக்கு நித்ய நிந்தை
சீக்கிரத்தில்க் கைமேலே வரவுஞ்ச் செய்தார்
சிதைவாக்கி யவர்களுக்கு நித்ய நிந்தை
சீக்கிரத்தில்க் கைமேலே வரவுஞ்ச் செய்தாரே
23 யோசேப்பின் கூடாரம் பிறக்கணித்து
யூதாவின் கோத்திரத்தைத் தெரிந்துகொண்டார்
மோசக்கார எப்ராயீம் கோத்திரத்தை
முக்கியமாய் வைக்காம லகற்றித்தள்ளி
நேசித்தார் சீயோன்மலை தனைஸ்தாபித்தார்
நித்யநிலை யஸ்திவாரப் பூமிபோல
தேசத் திலுள்ளமலைத் திரளிலெல்லாஞ்
சிறப்பாக அதைஉயர்த்தி யாக்கினாரே
24 தம்முடையசனமான யாக்கோபையும்
தமதுசொத்தா மிசரவேல் மக்களையும்
செம்மையாய் மந்தைபோல் மேய்த்தேயாளத்
தெரிந்தெடுத்தார் தம்தாசன் தாவிதையே
செம்மரியா டடைந்ததோளத் திருந்தழைத்தார்
திரிந்தலைந்தான் கருவலா டொதுக்கிக்கொண்டு
அம்மனுசன் மனவுண்மை கைவினாவாய்
ஆண்டுகொண்டான் தெய்வத்துடை சனத்தைத் தானே