76 சங்கீதம்
76 சங்கீதம்
குறள் – கிண்ணார ராகத் தலைவனால் வாசிக்கப்
பண்ணின் ஆசாபின் பாட்டு
காம்போதி ஆதிதாளம்
சாமியோயூதா பூமி மிதிலே தமது
தாக்கமே விளங்கினார்
1 சாமிநாமம் இசரவேலில்ச் சாலவுமே பெரியதாகும்
சாலேமிலே அவர்கூடாரத் தங்கல்சீயோனில்
ஆமங்கேதானிருந்து வில்லின்
அம்புகேடையம் பட்டயமும்
நாமயுத்தநடப்புங் கூட
நாசமாகச்செய்திடுவார் – சாமி
2 மகத்துமானவரே
வலுகொள்ளை மலையைவிட
மிகவும்வெளிச்சப்பிரகாசமாய்
விளங்கியே நிற்பீர்
அகந்தையாம்வீரர்களும்
அதிகக்கொள்ளையாய்ப் போனார்கள்
அயர்ந்துறங்கிவிழுந்திட்டார்கள்
அவமானமாகினார்கள் – சாமி
3 வல்லவர்களெல்லார் கையும்
வந்ததில்லைதமது கவைக்கு
வல்லயாக்கோபுடைய சுவாமீ
மாவும்ரதமும்
சொல்லால்உமது தம்புதலால்ச்
சேர்ந்துறங்கிச் சாய்ந்ததுவே
சுவாமிநீரே பயங்கரர்
சுவாமிநீரே பயங்கரர் – சாமி
4 உமதுகோபம் அக்னிப்பொறியாய்
உயருவது முதற்கொண்டு
உமக்குமுன்னேயார்தான் நிற்பான்
ஒஞ்சிடாமலே
உமதுஞாயத்தீர்ப்பதனை
உயர்ந்தவானத் தலங்களென்ற
உன்னதத்திலிருந்துகேட்க
உறுதியாய்ப் பண்ணிவைத்தீர் – சாமி
5 ஆம்மனிதகோவம் உம
தகண்டமகிமை விளங்கச்செய்யும்
அதனஉக்ரங்கொண்டே யின்னம்
அரைகட்டிக் கொள்வீர்
பூமியெங்குமுள்ள சிறுமைப்
புத்திரரை ரட்சித்திட
சாமிகேள்விக்கெழும்பும்போது
பூமிபயந்தமர்ந்தது – சாமி
6 பொருத்தனை நேர்ந்து செலுத்திடுங்கள்
தெய்வமான சுவாமிக் கவரைக்
கருத்தாய்ச்சூழும் நீங்களெல்லாங்
காணிக்கைசெய்ங்கள்
பிரபுக்களின் ஆவிதன்னை
நருக்கிடுவார் அவர்பூமி
அரசருக்குப் பயங்கரர்
ஆகிநிற்பார் அவர்என்றும் – சாமி