75 சங்கீதம்
75 சங்கீதம்
குறள் – ஆசாப்புதான்கெடாமல் ஆக்கிராகத் தாசாமி
வாசிக்க ஒப்புவித்த பாட்டு
மோகனம் ஆதிதாளம்
உம்மைத்துதிசெய்கிறோம் தெய்வமே
உம்மைத் துதிசெய்கிறோம்
1 உம்முடைநல்நாமம் எம்மிடம்சமீபமாம் – உம்
2 உமததிசயத்திரளைச் சொல்வர்கள்
உம்நேமத்துள்ளானதைப் பெறுகையில்
சமநிதானமாய்ஞாயந் திர்ப்பேன்
தரணியுந்தரணிக்குடியும் இளகும்போல
சமூலமாய்ப்போனாலும்
தாங்குவேன் அதின் தூணை – உம்
3 வீம்புக்காரர்களுடனே வீம்புச்சொல்
விளம்பாமலிருங்களென்றேன் ஆகாத
வீண்மக்களுடையகொம்பை உயரத்தில்
மேலிடவேண்டாமென்றேன் கொம்பேற்றி
வீம்பாகக்கழுத்தலுக்கி
மிரட்டாமலிருங்களென்றேன் – உம்
4 மேற்குத்திசை கிழக்குத்திசைமலைசேர் திசையும்
வெறும்வனாந்தரத்திசையும் இருந்து
தாக்காக உங்கட்குச்செயமே வராது
சாமியேஞாயஅதிபர் ஆனதால்
தாக்காக அவனவனைத்
தாழ்த்துவார் உயர்த்துவாரே – உம்
5 மிகவுமேமதுப்பொங்கி வடியும் பாத்திரம்
எகோவாவின் கையிலிருக்கும் அவர்
தகுதியாய்அதுக்குள்ளேயிருந்து வார்ப்பார்
தரணியிலுள்ள துன்மார்க்கர் அனைவரும்
வெகுவாக அதின்வண்டலை
வெறிக்கவே குடித்திடுவார் – உம்
6 நானிதையென் றென்றைக்குமறியச் செய்து
யாக்கோபின்தெய்வத்தை வாழ்த்திப்பாடி
வீணான ஆகாதோர்கொம்பு யாவையும்
வெட்டிவெற்றி பாடுவேன்யான் நீதியரி
மேன்மையின் கொம்புயாவும்
மேலானதாகுமே – உம்