73 சங்கீதம்
73 சங்கீதம்
ஆசாபின் சங்கீதம்
அசாவேரி(அகவல்)
1 இருதயசுத்தராம் இசரவேலருக்கு
நடுநிலைத்தெய்வம் நல்லவர்தாமே
2 என்னுடைகால்களோ இடறியேசாயவும்
என்னடிகள்சறுக்கவும் இடைந்ததுசற்றே
3 தூயவாழ்வுடைய துட்டரைக்காண்கையில்
வாய்வீணர்மேலே மனக்கடுப்பானேன்
4 மரணநாள்மட்டும் வருத்தமில்லாமல்
பெரும்பெலனாகப் பிழைப்பார்கள் அவர்கள்
5 மானிடசென்ம் வருத்தமுமற்ற
மானிடர்க்கொத்த வாதையுமடையார்
6 சரப்பளிபோல பெருமையையணிவர்
உடைநகைபோல் கொடுமையையணிவர்
7 கொழுத்ததம்கண்களால் வெறிகொண்டுபார்ப்பர்
கடுத்ததுன்மனசால் சினத்திருப்பார்கள்
8 அகந்தையாயிடுக்கண் அடைவிக்குஞ்செயலை
ம்கிமையாய்ப்பேசி வாட்டுவர்பிறரை
9 அவர்கள்தம்வாயை அந்தரத்தேற்றுவர்
அவர்கள்நாப்படிக்கே அவனியில்நடக்கும்
10 அவர்களின்சனங்கள் அவ்வழிதிரும்பும்
அவர்கட்டுத்தண்ணீர் அனந்தமாய்ச் சுரக்கும்
11 என்னமாய்த்தெய்வம் இதுகளையறிவார்
உன்னதர் அதையறிந் துணர்வரோஎன்பர்
12 ஆகாதமாந்தர் ஆகியும் இவர்கள்
தேகத்துச்சொகுசாய்த் திரட்டுவராஸ்தி
13 இருதயச்சுசியாய் இருந்ததுவிருதா
கரங்களைப்பவமறக் கழுவினேன்வீணாய்
14 நிதசரிவாதனை நெருக்குமேயென்னை
அதிகாலைதோறும் அணுகுமேதெண்டனை
15 இந்தச்சொல்ச்சொன்னால் எகோவாவின் மக்கள்
சந்ததித்துரோகியாய்ச் சமைவனேயானும்
16 இதையறிந்திடவே இயோசனையெடுத்தேன்
இதையறிந்திடவே இயோசனையெடுத்தேன்
17 இவர்களின் முடிவை எகொவாவீட்டுட்போய்க்
கவனிக்கும்வரைக்குங் கடுப்பெனக்காச்சே
18 சருக்கலிலவர்கள் சார்ந்திடச்செய்து
பெருக்கவேயழிவில்ப் பிறண்டிடச்செய்வீர்
19 ஒருநொடிப்பொழுதில் ஒழிவர்எத்தனையாய்
அருண்டுநிர்மூலமாய் அழிவர்கள்பயமாய்
20 தூக்கத்துக்கனவே தொலையும்போலவர்கள்
மேல்க்கோர்ப்பூர்க்குள்ளே வெறுமையாகிடட்டும்
21 இதயத்தின்வாதனை இடும்பு நெஞ்சும்மாய்
நிதானத்தையறியா நின்மூடனானநான்
22 உமக்குமுன்மிருகத் தொற்றுமைக்குணமாய்
தவிக்கிறேன்இங்கே சாமியாண்டவரே
23 ஆகையாலும்மிடம் அமர்வன் எப்போதும்
ஏகஎன்வலதுகை யேந்தியேதாங்குவீர்
24 நடத்துவீர்உம்முடை யோசனைநலப்படி
கடைசியில்மகிமையைக் காட்டுவீர்எனக்கு
25 உம்மையல்லாமல் உன்னதத்தலங்களில்
நன்மையாயெனக்கு யாரிருக்கிறார்கள்
26 உம்முடனிந்த உலகத்துவசிப்பிலும்
மண்மீதிலெனக்கு மறுநோக்கமில்லை
27 என்னுடைமாமிசம் என்னிதையந்தானும்
இந்நிலைபெயர்ந்து இறந்துபோம்போது
28 என்றென்றுந்தெய்வம் என்னுடைஇதையக்
கன்மலையும்எனது காணியுமாவார்
29 உம்மைவிட்டகல்வோர் ஒய்ந்தளிவார்கள்
உம்மள்கற்பழிந்தோர் ஒக்கமாந்திடுவர்
30 எனக்கிங்குதெய்வத்தோ டிசையுதல்நல்மே
எனக்கிங்குதெய்வத்தோ டிசையுதல்நலமே
31 சகலமாம்உமது செயல்சொல்லிவரவே
எகோவாவினிடத்திநி லென்பற்றமிருக்கும்