72 சங்கீதம்
72 சங்கீதம்
(சாலோமோனைப்பற்றியது)
புன்னாகவராளி ரூபகதாளம்
ராசனுக்கும்உம்முடைய ஞாயயுக்தியை யருளும்
நேசராசன்மகனுக்குமது நீதியைத்தாரும்
1 பேசிடட்டும் நீதிஉமது
பிரசைகளுக்கு அவர்
பிசகாஞாயஞ்செயட்டுந்துன்பம்
பிடித்தபேர்களுக்கு – ராச
2 சாடைமலைகள் சனங்களுக்குச்
சமாதானத்தைக் கொடுக்கும்
மேடுநீதிவிளைவுடனே மிஞ்சிநிரம்பும் – ராச
3 சிறுமையோர்க்குச் செய்வார்ஞாயம்
சிறியோர்மக்களை மிட்டுத்
தறுகுறும்பாய்இடுக்கஞ் செய்வோன் தலைநசுக்குவார் – ராச
4 சந்திரனுஞ்சூரியனுந்
தரிக்குமட்டுக்கும் அவர்கள்
சந்ததியாய்உமக்கே அஞ்சித்
தத்தளிப்பார்கள் – ராச
5 புல்லறுத்தவெளியிற் பெய்யும்
புதுமழைபோலும் பூமீ
மெல்லநனையுந் தூற்றல்போலும்
விண்டிறங்குவார் – ராச
6 சந்திரனேஒழியுமட்டும்
சமாதானமே மிகுக்கும்
அந்தஅவர் நாள் நீதிமான்கள்
ஆண்டுசெழிப்பார்கள் – ராச
7 மாறுகடல்த் தொடங்கியப்பால்
மறுகடல்மட்டுங் கவிந்து
ஆறுதுவக்கிப் பூமியெல்லை
அனைத்தும் ஆள்வார்கள் – ராச
8 வனாந்தரத்தார் அவர்க்குமுன்னே
வந்துகுனிவார்கள் அவரை
வணங்கியவர் பகைஞர்விழுந்து
மண்நக்குவார்கள் – ராச
9 ஆவலாகத் தற்சீஸ்வேந்தர்
அனைவரோடுமே சேர்ந்து
தீவுவேந்தர் காணிக்கைகள்
செலுத்தவருவார்கள் – ராச
10 சவேய்சேபா என்றதேசச்
சாதிவேந்தர்கள் ஒன்றாய்க்
குவிந்துமகிமை யெனாங்களைக்
கொண்டுவருவார்கள் – ராச
11 சகலவேந்தர் தாமும்அவர்க்குத்
தாழ்ந்துகுனிவார்கள் அவரைச்
செகத்திலுள்ள சாதியெல்லாம்
சேவிப்பார்களே – ராச
12 அபையம்வைக்கும் எளியமாந்தன்
ஆதரவற்றோன் மிக
உபவத்திரவப் படுவோனையும்
உவந்துவிடுவிப்பார் – ராச
13 எளியவனை தரித்திரனை
இடுக்கம்நீக்கியே விட்டு
எளியவர்கள் ஆத்துமாவை
இரட்சித்திடுவாரே – ராச
14 சூதுகொடுமைக் கவர்கள் தப்பிச்
சுகிக்கச்செய்குவார் அவர்கள்
சேதரெத்தம் அவர்பார்வைக்குச்
சிறந்த அருமையாம் – ராச
15 அவர்பிழைப்பார் சேபாப்பொன்னில்
அவர்க்குவருமே என்றும்
அவர்க்கேபுகழ் அவரைவேண்டிச்
செபஞ்செய்வார்களே – ராச
16 செகந்தனிலே மலைகளுடை
சிகரமீதினில் விதைத்த
தகுந்தஒரு பிடிதானியத்
தன்மை போலாகும் – ராச
17 அதின்விளைச்சல் லீபனோன்போல
அசையும்நல் நிலத்துப் பூண்டின்
இதளைப்போலே பட்டணத்தி
லிருந்து பூப்பார்கள் – ராச
18 சந்தாளத்துப் பாரம்பரையாய்த்
தரிக்கும்அவர்பேர் சூர்யன்
அந்தமட்டும் என்றென்றைக்கும்
அவர்பேரிருக்கும் – ராச
19 அவருக்குள்ளே எச்சாதியும்
ஆசீர்வதிக்கும் அவரைச்
சவுபாக்கிய முடையோரென்னைச்
சாற்றுவார்களே – ராச
20 ஏகமாகப் புதினஞ்செய்யும்
இசரவேல்த்தெய்வ மான
எகோவாவே தோத்ரம்வெகுவாய்
ஏற்கத்தக்கவர் – ராச
21 அவர்மகிமை நாமமென்றும்
அனந்தபுகழே நிறையும்
அவர்மகிமை பூமியனைத்தும்
அமையும் ஆமன் ஆம் – ராச
22 ஈசாயுடை குமாரனான
இராசன்தாவீது வெகு
ஆசையுடன் செய்தசெபங்கள்
அறுதியாச்சே – ராச