70 சங்கீதம்
70 சங்கீதம்
கலிப்பா – நினைப்பூட்ட லாகயூத நிருபனாந் தாவீது
இணைத்து ராகத் தலைவனுக்கு
ஏற்பிவித்த சங்கீதம்
தோரடி ஆதிதாளம்
சகாயஞ்செய்திடும் விரைவாக எந்தன்
எகோவாவாந் தெய்வமே எனைத்தப்பவையும்
1 பகைசெய்தென் பிராணன்
பறிக்கநாடுவோர்கள் ஆம்
மிகவும் வெட்கி நாணிப்போக
விதங்கள் செய்குவீரே – சகா
2 எனக்கழிவெண்வோர்
முனையற்றுக்கலங்கி ஆம்
மனக்குளப்பம் வெட்கமாகி
மாறியோடச் செய்யும் – சகா
3 ஆகா! ஆகா ! என்போர்
அடையும்வெட்கப் பலனால் தாம்
தேகந்தளர்ந்து பின்வாங்கி
திரும்பியோடச் செய்யும் – சகா
4 உகந்தும்மைத்தேடும் உத்தமர்கள்யாரும் நல்
மகிழ்வாய்உமக்குள்ச் சந்தோஷம்
வாஞ்சையாய்க் காணட்டும் – சகா
5 உமதுநல்ரட்சிப்பை உகந்தண்டுவோர்கள் ஆம்
உமக்கென்றும் மகிமையென்று
தமுக்கடிக்கச் செய்யும் – சகா
6 தவிப்பெழியோன் நானே சகாயந்துணை நீர்தான் எனக்கு
அவக்கெனநீர் வந்துஉதவும்
அவதியிலென் சுவாமீ ! – சகா