69 சங்கீதம்
69 சங்கீதம்
குறள் – தாவீது ராகத் தலைவனுக்கா யாறுதந்திப்
பாவீணைக் கென்றமைத்த பாட்டு
எதுகுலகாம்போதி ஆதிதாளம்
1 தண்ணீர்களென் ஆத்துமாவைத்
ததும்பிமூட வருகிறதே
என்னைத்தாங்கி ரட்சித்தருளும் இப்போ சுவாமீ !
2 மண்ணுழையாம் நிலையாத
மலைவுவெள்ளந் தனிலமிழ்ந்தித்
தண்ணீர்களின் பாதாளத்துள் ளானேன் சுவாமீ !
3 எனதுமேலே நீரோட்டங்கள்
எழும்பியிங்கே புரண்டுவரும்
எனதுதுயர்க் கூப்பாட்டினால் இளைத்தேன் சுவாமீ !
4 எனதுதொண்டை கம்மிப்போச்சே
என்தெய்வத்தை நோக்கினால்
எனதுகண்கள் பூத்துமங்கிப் போச்சே சுவாமீ !
5 காரணமில்லாமல் எனக்குக்
கடும்பகைஞ ரானவர்கள்
ஊரிலெந்தன் தலைமயிர்க்கும் அதிகம் சுவாமீ !
6 வீண்பகைஞ ராகஎன்னை
வெட்டிக்கொல்வோர் பெலத்திட்டார்கள்
நான்பறிக்கா ததைக் கொடுக்குங் காலம் சுவாமீ !
7 எனதுபுத்தியீனத்தை நீர்
என்றென்றைக்கு மறிந்திடுவீர்
எனதுகுற்றம் உமக்கொழித் திராதே சுவாமீ !
8 சேனைகளின் ஏகொவாவாந்
தெய்வம்உம்மை நம்பும்பேர்க்கு
நாணம்எந்தன் மூலமாய்வர வேண்டாம் சுவாமீ !
9 இசரவேலின் தெய்வமும்மை
என்றும் தேடும் மாந்தர்என்னால்
அசந்துவெட்க மடையாதிருக்கச்செய்யும் சுவாமீ !
10 உம்முடைய நிமித்தம்நானோ
உத்தரித்தேன் நிந்தைதன்னை
என்முகத்தை வெட்கமூடிக்கொள்ளும் சுவாமீ !
11 எனதுதாயின் பிள்ளைகட்கு
இப்போவேற்று மனிதனானேன்
எனதண்ணன்மார்க் கன்னியனுமானேன் சுவாமீ !
12 உம்முடைய வீட்டுக்காக
உருகும்பத்தி வயிராக்கியம்
பம்மஎன்னைப் பட்சித்தறுக்கு மிப்போ சுவாமீ !
13 உம்மை நிந்தை செய்தவர்கள்
உம்மைச்சொன்ன நிந்தனைகள்
என்மேலிங்கே விழுந்துஎன்னை நசுக்குஞ் சுவாமீ !
14 எனதாத்ம உபவாசத்தால்
ஏங்கியேநான் அழுதுகொண்டேன்
எனக்கதுவோ நிந்தனைக ளாச்சு சுவாமீ !
15 இரட்டெனக்கு உடுப்பாயிற்று
எனதுகோலம் அவர்களுக்கு
இட்டமான பழமொழியும் ஆச்சே சுவாமீ !
16 மதத்தென்னைப் பேசுவார்கள்
வாசலில் யுட்கார்ந்தோர்கள்
மதுபான வெறியர் பாடலானேன் சுவாமீ !
17 கற்தாவேநான் பிரியமான
காலத்தும்மை நோக்கியெந்தன்
சத்தத்தினால் விண்ணப்பங்கள் செய்தேன் சுவாமீ !
18 மிகுதியான உமதுகிருபை
மீட்பின்சத்யம் என்ற இதினால்
எகோவாவே என்விண்ணப்பங் கேளும் சுவாமீ !
19 நானமிழ்ந்திப் போய்விடாமல்
நாறச்சேற்றுத் தண்ணீருக்கு
நான்விலகச்செய்தருளும் இப்போ சுவாமீ !
20 தண்ணீர்களி னாழங்களையுஞ்
சத்துராதி தனையும் விட்டு
என்னை நீங்கச் செய்தருளும் இப்போ சுவாமீ !
21 ஆழமான துறவு என்னை
அடைத்துவாயால் முழங்கவேண்டாம்
நீரோட்டங்கள் என்மேல்புறளவேண்டாம் சுவாமீ !
22 என்விண்ணப்பங் கேட்டருளும்
எகோவாவே உமதுகிருபை
என்மேல்வெகு நலமாயிருக்கும் அல்லோ சுவாமீ !
23 உமதூழ்யக் காரனுக்கு
உமதுமுகம் மறைக்கவேண்டாம்
உமதுவெகு இரக்கத்தால்க்கண் பாரும் சுவாமீ !
24 எனக்கிங்கே நெருக்கமுண்டு
ஏகொவாவே தீவிரமாய்
எனதுவாயின் விண்ணப்பத்தைக் கேளும் சுவாமீ !
25 எனதாத்மத் தண்டை வந்து
இரங்கியதை விடுவித்தருளும்
எனதுபகைவர் நிமித்தம்என்னை ரட்சியும் சுவாமீ !
26 நிந்தைவெட்கம் அவமானமும்
வந்ததெனக் கென்றறிவீர்
என்பகைஞர் யாரும்உமக்கும் பகைஞர் சுவாமீ !
27 நிந்தையெந்த னிருதயத்தை
நெருக்கிமிக முறிக்கிறதே
நொந்துமகா பெலக்கேடாகிப் போனேன் சுவாமீ !
28 இரங்கியெனைத் தேற்றஒருவன்
இங்கேயுண்டோவென்று பார்த்தேன்
ஒருவனையும் அந்தப்படிக்குக் காணேன் சுவாமீ !
29 எனக்குப்பிச்சு உண்கத்தந்து
என்னுடைய தாகந்தன்னில்
எனக்குக்காடி குடிக்கக்கொடுத்திட்டார்கள் சுவாமீ !
30 அவர்கள்பந்தி அவர்கள்முன்னே
அளக்குஞ்சரிக்கட் டாவதல்லால்
கபட்டுக்கண்ணி சுருக்குமாகச் செய்யும் சுவாமீ !
31 அவர்கள்கண்கள் பார்வையற்று
அந்தகாரப் பட்டிடட்டும்
அவர்களிடுப் யெப்போதுந்தள் ளாடட்டும் சுவாமீ !
32 ஆ! வுமது சினத்தினுக்ரம்
அவர்களைப் பின்தொடர்ந்திடட்டும்
கோவத்தைநீர் அவர்கள்மேலே ஊற்றும் சுவாமீ !
33 அவர்களுடை கூடாரத்தில்
அற்றுப்போகச் செய்யும் குடிமை
அவர்கள்வீடு வாசல்பாழாய்ப் போகட்டும் சுவாமீ !
34 உம்மால்க்காயம் பட்ட பேர்க்கு
உள்ளம்நோகப் பேசுவார்கள்
உம்மடிபட் டவனைத்துன்பஞ் செய்வர் சுவாமீ !
35 அவர்களுடை அக்ரமத்தோ
டக்கிரமஞ் சேர்ந்திடட்டும்
அவர்களுமது நீதிக்கு வராமல் சுவாமீ !
36 ஆவல்நீதி மான்களோடே
அவர்கள்பேர் பதி வாகிடாமல்
சீவபொஸ்தகப் பதவில்க்கிறுக்கப் படட்டும் சுவாமீ !
37 நான்சிறுமை நோவுமுள்ளோன்
நாயனுமது ரட்சிப்பெனக்கு
மேன்மைத்தஞ்ச மாகவந்து சேரட்டும் சுவாமீ !
38 சுவாமிக்குநான் தோத்திரத்தைச்
சொல்லியவரை மகிமைப்படுத்திச்
சுவாமிபேரைப் பாட்டினாலே துதிப்பேன் சுவாமீ !
39 கொம்புவிரி குளம்புமாடு
கொழுத்தகாளை யெருதைவிட
றெம்பஅதே கற்தருக்குப் பிரியம் சுவாமீ !
40 சின்னப்பட்டபேரும் அதைத்
தெரிசித்து மகிழுவார்கள்
உன்னதரைத்தேடுவோர்க ளிதையம் வாழும்
41 கட்டுண்டதம் முடைய பேரைக்
கற்தர்புறக் கணிக்கமாட்டார்
கெட்டுப்போன எளியோர்களைக் கேட்பார் சுவாமீ !
42 வானம்பூமி கடலும் அததில்
வாழுஞ்சீவப் பிராணியாவும்
ஞானச்சுவாமி நாமந்துதி செய்யட்டும் சுவாமீ !
43 பரன்சீயோன் தனை ரட்சித்துப்
பட்டணங்கள் யூதாவினில்
திரமாயின்னுங் கட்டும்படி செய்வார் தயவாய்
44 அவரடியார் அவர் நாமத்தில்
அன்புகூர்வோர் அங்கேதங்கிப்
பவிசாயதைச் சுதந்தரிந்துக் கொள்வர் சுவாமீ !