67 சங்கீதம்
67 சங்கீதம்
குறள் – கீதத் தலைவனுக்கு கிண்ணார ஒசையில்
ஒதுவிக்கத்தந்த கீதப்பாட்டு
காம்போதி திரிபுடைதாளம்
1 உம்முடைய நல்லவழியை
உலகத்தின் சனங்கள றிவதாக
உம்முடைய ரட்சிப்பெல்லாக்
குலங்களுமுணர்வதாகச் சுவாமீ
2 எங்களுக்கிங் கிரக்கங் காட்டி
எங்களுக்கு ஆசீர்வாதந் தாரும்
எங்களுக்கு உமதுமுகம்
ஏறெடுத்து வெளிச்சங் காட்டுஞ் சுவாமீ
3 எல்லாவிதச் சனக்கூட்டமும்
எகோவாவே உம்மைத்துதிப்பதாக
எல்லாவிதச் சனத்துச் சபையும்
எகோவாவே உம்மைத்துதிப்பதாக
4 சாதிகளை ஞாயங்கேட்டுச்
சரியாநீர் நடத்துவதினாலே
சாதிக்கூட்டம் உம்மில்மகிழ்ந்து
சாலவுமே கெம்பீரிக்கச்செய்யும்
5 எல்லாவிதச் சனக்கூட்டமும்
எகோவாவே உம்மைத்துதிக்கச்செய்யும்
எல்லாவிதச் சனத்துச்சபையும்
எகோவாவே உம்மைத்துதிக்கச்செய்யும்
6 பூமிபலனெங்களிடத்தில்
போர்ந்தவளமாக வரச்செய்யும்
சாமிநீர் தா மெங்க ளிடத்தில்
தாரும்உம தாசீர்வாதந் தாரும்
7 சாமியெமக் காசீர்வாதந்
தந்திடுவார் தந்திடுவாராக
பூமியெல்லை யாவும்அவர்
போதனைக்கே அச்சமாவதாக