63 சங்கீதம்
63 சங்கீதம்
குறள் – காடானயூதாவின் கானகத்தில்த் தாவீது
பாடின சங்கீதமே
1 வது பங்கு வச. 1 – 4
வனஸ்பதி ஆதிதாளம்
தெய்வமே ! நீரென் தெய்வமே !
1 தெய்வமேநான் அதிகாலையில்த்
தேடிநிற்கிறேனே உம்மை – தெய்
2 வற்றியே தண்ணீரற்றதாய்
அற்றதாகவறண்டஇந்த ஆரணியப்பூமியிலே – தெய்
3 உம்மிலே தாகங்கும்முமே
கும்முமே யென்னாத்துமமும்
கூடும்உம்மில் வாஞ்சைகொள்ளும் – தெய்
4 உம்முடைமகிமை வல்லமை
கண்முன்னுமதாலயத்தில்க்
காணத்தேட்டமெனக்கதிகம் – தெய்
5 தெய்வமே எனதுதெய்வமே
தெய்வமேயிங்குமது கிருபை
சீவனிலும் நலம்நலமே – தெய்
6 தோத்திரம்உமக்குச் சேர்த்திடும்
சேர்த்திடுமே எனதுஉதடு
சீவனுள்ள நாளிலெல்லாம் – தெய்
7 உம்முடைநாமஞ் சொல்லியே
செம்மையாயென்கையைக் குவித்துச்
சேவித்தும்மைத் தோத்தரிப்பேன் – தெய்
2 வது பங்கு வச. 5 – 11
எதுகுலகாம்போதி ஏகதாளம்
நிணங்கொழுப்பை யுண்டாப்போலே
எனதாத்துமந் திருத்தியாகும்
1 நினைப்பெனும்மை மெத்தைமேலே
நிகழ்த்தும்வாய் தெம் புதட்டால்த்துதி – நிணங்
2 துணையாய்நீர் எனக்கிங்கிருந்தீர்
சுவாமிஉமதுசெட்டைகளின்கீழ்
தனுவாகக் கெம்பீரிப்பேன்
சாமங்களில் நினைப்பேனும்மை – நிணங்
3 உம்மையெந்தன் ஆத்துமமே
ஒட்டித்தொடர்ந்திடுமே சுவாமீ !
உம்முடைய வலதுகரம்
உவந்தென்னைத் தாங்கிடுமே – நிணங்
4 வெட்டஎந்தனுயிரைத் தொடர்வோர்
வீழ்வர்பூமிப் பாதாளத்துள்
பட்டயத்துக் கிரையாவார்கள்
பங்காவார்கள் நரிகள்வாய்க்கு – நிணங்
5 மனமகிழ்வான் பரனிலரசன்
வாய்மைச்சத்யம் அவன்மேற்செய்வோர்
அனைவர்களும்மேல்ச்சொல்ச் சொல்வார்
அடைபடுமே பொய்யர் வாய்கள் – நிணங்