62 சங்கீதம்
62 சங்கீதம்
கழிநெடில்
தாவீதெதுத்தூன் என்னுமோர்ராகத்
தலைவற்காயிந்தப்பாட் டமைத்தான்
சாமியைத்தானே நோக்கி யென்மனது
சாந்தமா யமர்ந்துகொண்டிருக்கும்
தேவனேயெனது கன்மலைமீட்புச்
சிறந்தநல் லடைக்கல மானார்
தெய்வத்தாலெனது ரெட்சிப்பும்வருமே
ஆவலாயெந்தமட்டுமோர் மனிதன்
அழிவடைவானெனப் பார்ப்பீர்
அனைவருஞ்சாய்திட சுவர்மதில்போல
அறுப்புண்டு செத்திடுவீர்கள்
தீவிரமாயவன் மேன்மைவிட்டிறங்கச்
செய்வதையோசித்துப் பொய்யைச்
செப்பிடவிரும்பி வாயினால்ப் புகழ்ந்து
சிந்தையால்ச் சபித்திடுவார்கள்
குறிஞ்சி சாபுதாளம்
தெய்வத்தை நோக்கியமர்ந்திருநீ
1 தெய்வத்தால்வருமேநான் நினைத்ததுமனதே – தெய்
2 திடமானகன்மலைமீட்பு உயர்ந்த
அடைக்கலம்அவரே நான் அசைவதேயில்லை – தெய்
3 எகோவாகியதெய்வத் திடத்தில்
மகிமையும்இரட்சிப்பும் இருக்கிறதெனக்கு – தெய்
4 பெலனான கன்மலை தஞ்சம் வலுத்த
சலுகையுஞ்சுவாமிக்குள் இருக்கிறதெனக்கு – தெய்
5 எகோவாவாகிதெய்வம் நமக்கு
மகாநல் அடைக்கலம் ஆகினர்சனமே – தெய்
6 தெய்வத்துக்குங்களினிதையம் ஊற்றி
எவ்விதக்காலத்தும் நம்புங்கள் அவரை – தெய்
7 குடியானபேர்களோமாயை யானர்
படைவீரர்மக்களும் பொய்யாகிப்போனர் – தெய்
8 இருவரும்ஏகமாய்த்திராசில் நிறுக்க
உருவில்லாவெறுமையாந் துலாவேறிப்போனர் – தெய்
9 கொடுமையைக்கொள்ளையைநம்பி வீணாய்ப்
பெருமைகொள்ளாமலே உலகில்வாழ்ந்திருங்கள் – தெய்
10 ஆஸ்திகள்வளர்ந்திடுமானால் அதைப்
போற்றியேமனத்தில் வைத்திடாதிருங்கள் – தெய்
11 பரனுக்கேவல்லமையென்று தெய்வம்
ஒருதரஞ்சொன்னதை இருதரங்கேட்டேன் – தெய்
12 கிருபையும்உமக்கதுசுவாமி அவனவன்
கிரியைக்குத்தக்கதாம் பதில்பலன்கொடுப்பீர் – தெய்