61 சங்கீதம்
61 சங்கீதம்
குறள் – கிண்ணார ராகத் தலைவனிடம் ஒப்புவித்த
மன்னனாந் தாவீதின் பாட்டு
சங்கராபரணம் ரூபகதாளம்
என் மன்றாட்டைப்பாருஞ் சுவாமீ !
என்கூப்பாட்டைக் கேளும்
1 சஞ்சலத்தில்ப் பூமியொதுங்கல்
தனி கூப்பாடுசெய்வேன் – என்
2 என்னையிப்போ நிற்குமலைக்கும்
உன்னாலான தலத்தில்ச்சேரும் – என்
3 பகைஞர்க்கெதிர்க்க நீரிங்கெனக்கு
மகிமைத்தஞ்சம் பெலத்ததுருக்கம் – என்
4 நீடியநற்காலம் உமது
கூடாரத்தில்த் தங்கல்செய்வேன் – என்
5 உம்முடைய செட்டைகளின்
நன்மைமறைவில் வந்தேயடைவேன் – என்
6 எனதுநேர்த்திக் கடனின்படி
எனதுசெபங்கேட்பீர் சுவாமீ – என்
7 உமதுநாம மஞ்சுவோரின்
அமைதிச்சுதந்திரத்தைத் தருவீர் – என்
8 ராசாவுடை நாட்களோடே
சேசநாட்கள் கூட்டுவீரே – என்
9 தலைவனவன் வருடங்களோ
நிலையாய்த்தலைமுறையாய்ச் செல்லும் – என்
10 தெய்வசமுகத் தென்றென்றைக்கும்
மெய்யாயவன் நிலைத்தேயிருப்பான் – என்
11 அருமையோடே அவனைக்காக்க
கிருபையுண்மை தொடரச்செய்வீர் – என்
12 நிதமென்நேர்த்திக்கடன் போக்கியிவ்
விதமாயுமது நாமந்துதிப்பேன் – என்