60 சங்கீதம்
60 சங்கீதம்
விருத்தம்
மெசொப்பொத்தாமியா சோபாச் சூர்யரோடும்
வெகுண்டுயுத்தந்தாவீது தொடுக்கயோவாப்
பாசமாய்த்திரும்பிஉப்புப் பள்ளத்தாக்கில்ப்
பன்னிராயிரம்ஏதோ மியரைவெட்டி
நாசம்விலக்கியசாட்சி விளங்க ஆறு
நரம்புவீணைப் போதனையின் கவியாப்பாட
ஒசைராகத் தலைவனுக்குக்கொடுத்ததிந்த
உயர்தங்கச்சங்கீத மென்னும்பாட்டே
துசாவந்தி ஆதிதாளம்
எங்களுடைபாரிசமாய்த் திரும்பும்இப்போ சுவாமீ !
1 எங்களைத்தகர்த்தொழித்துக் கோவமாய்
இடுக்கமாகமுன் நடத்தினீர் – எங்
2 பூமியைநீர் அதிரப்பண்ணிப்
போரவெடிப்பாக்கினீர்
புறண்டதிரும் அதினாலதின்
வெடிப்புகளைக் கட்டும்
தீமையானகாரியத்தை உமதுசனங்காணச்
செய்துபின்னுந்தத்தளிப்பின்
மதுகுடிக்கக் கொடுத்தீர்
சாமிஉமக்கஞ்சுவோர்க்குச்சத்தியத்தினிமித்தம்
சாற்றுமோர்கொடி யன்பர்விட்டாத்திச்
சந்தோஷங்காணத் தந்தீர் – எங்
3 உமதுவலக்கரத்தாலே உதவிசெய்துறெட்சியும்
உறுக்கமாகநாங்கள்செய்யும் உறுதிச்செபங்கேளும்
உமதுவலக்கரத்தாலே உதவிசெய்துறெட்சியும்
உறுக்கமாக நாங்கள்செய்யும்உறுதிச்செபங்கேளும்
தமதுநல்லவிசேடத்துத்
தலத்தில்த்தெய்வஞ்சொன்ன
தாக்கமானநல் லுத்தாரத்திலே
சந்தோசக் களிப்பாகுவேன் – எங்
4 சீகேமைப்பங்கிடுவேன்
சுக்கோத் பள்ளம்அளப்பேன்
திடகீலேயாத்தெனக்காமே
சேர்மனாசேயும் எனக்கே
சேகையானஎப்பிராயீம்என் சிரசின்பெலன்தானே
செயயூதாஎன்ஞாய நெறியாளன்தானே
ஆகாதமோவாபுநான் அழுக்குக்கழுவும்பாத்திரம்
அழிபெலிஸ்தர்மே லார்ப்பரித்தேதோம்
ஆக்கிரமத்தில்க் கால்நீட்டுவேன் – எங்
5 அரணானநகர்க்குள் என்னை
அழைத்துப்போபவர் யார்தான்
அந்தஏதோம்மட்டுமென்னை
அழைத்துப்போபவர் யார்தான்
பரன்நீர்தாம் எங்களுடை படைத்திரள்களுடனே
பயணப்படாதிருந்துகொண்ட பரன் நீர் தாமல்லோ
பரன் நீர் தாம் எங்களின்மேல் பரதாபமின்றி
பாழ்க்கடிப்பிலே தள்ளிவிட்டநீர்
பார்த்தினித் தள்ளாதையும் – எங்
6 கனமான இக்கட்டகற்றிக் கடத்திவிடும் எங்களை
கணிசமான தயவதனைக் காட்டிவிடும் எமக்கு
மனிதர்எம்மைக்காப்பாரென்று வாஞ்சிப்பதும்அபத்தம்
மகிமையுள்ள தெய்வத்தினால்
வல்லமையாயிருப்போம்
அநியாயமாய்எங்களின்மேல் அடர்ந்துவரும் பகைஞர்
அனைவரையும்நம் மாண்டவர்தம
தடியினால் மிதித் தழிப்பார் – எங்