6 சங்கீதம்
6 சங்கீதம்
சவலை வெண்பா
எண்ணரம்புக்கிண்ணார வாத்தியங்கள் மேல்ப்பார்த்துச்
சன்னமாய்ப்பாடுந்தலைவனுக்குத் தாவீது
பண்பாக ஒப்புவித்த பாட்டு.
1 வது பங்கு. வச. 1 – 7
எதுகுலகாம்போதி ஆதிதாளம்
1 கற்தாவேசினமாயென்னைக்
கடிந்து கொள்ள வேண்டாம்
மெத்த என்னைத்தெண்டித்தென்மேல்
விசனம்வைக்கவேண்டாம்
2 எனக்கிரங்கும்என் சுவாமீ!
என்பெலனோகொஞ்சம்
என்னைக்குணமாயிருக்கச்செய்யும்
என் தெய்வமாஞ்சுவாமி !
3 என்னெலும்புகுலுக்கமுடன்
இருக்கிறதுமல்லால்
என்னாவிகலக்கமாகி
யிருக்கிறதுமுண்டே
4 இறங்காமல்எந்தமட்டும்
இருப்பீரென் சுவாமீ!
திரும்பவும் வந்தென்னிடத்தில்ச்
சேர்ந்தருளும்சுவாமீ !
5 மரணந்தன்னிலார்தானு ம்மை
வாஞ்சையுடனி னைப்பான்
இருள் நிறைந்த பாதாளத்தில்
எவன் தானும்மைத் துதிப்பான்
6 என்னுடையபெருமூச்சால்
இளைத்துத்தவிப்படைந்தேன்
என்னுடையமெத்தைதன்னை
இராமுழுதும்நனைத்தேன்
7 என் கண்ணீர் எனதுகட்டில்
எங்கும் நனையச்செய்தேன்
என் கண்கள் சலிப்படைந்து
இறங்கிக்குழியாச்சே
8 ஆ! எனது சத்துருக்கள்
அனைவர்களினிமித்தந்
தேய்வாகப்போன துபோல்த்
திரை ந்தவத்தமாச்சே
2 வது பங்கு. வச. 8 – 10
நாகவராளி சாபுதாளம்
அகன்றுபோய்விடுங்கள் எல்லா
அக்கிரமக்காரராம் மானிடரே
1 அகலுங்கள்என்னைவிட் டப்பாலேவிலகுங்கள்
எகோவாவோ என்னுடை ஏங்கலைக்கேட்டாரே – அகன்று
2 என்னுடை விண்ணப்பம் ஏகோவாகேட்டபின்
என்னுடைசெபத்தையும் ஏற்றாரே அவர் நன்றாய் – அகன்று
3 மிகவுமேகலங்கிப்போய் வெட்கமாயென்னுடை
பகைவர்களெல்லாரும் பயந்தோடிப்போவார்கள் – அகன்று
4 திரும்புவர் அவர்களுந் திகைப்புடன் பின்னாக
இருந்தாப்போல்வெட்கங்கெட்டிங்கேதான் திரும்புவர் – அகன்று