59 சங்கீதம்
59 சங்கீதம்
வெண்பா
தாவீதைக்கொல்லச் சவுலவன்வீடெங்குஞ்சூழ்
சேவகரையங்கனுப்பும் வேளையில் தாவீது
தான்கெடாமல்ப் பாடினதும்
சந்தமேலோன் பெற்றதுமாம்
மேன்மையாய்ந் தங்கப்பாட்டே
எதுகுலகாம்போதி ஏகதாளம்
என்னுடையசத்துருக்கட்கென்னைநீர் விலக்கிவிடும்
என்தெய்வம் என்சாமி!
1 என்மேலே யெழும்புகிற
மனிதர்க்கென்னை விலக்கிவிட்டு
உன்னதமாம் அடைக்கலத்தி
லென்னைநீரிருத்திவையும் – என்
2 துன்மார்க்கர்க்கெனை விலக்கி
றெத்தெத்த பேட்சைக்காரர்க்
கென்னைநீர் விலக்கிரட்சியும்
என்னத்துக்கென்றாலிதோ
என்பிராணன்வாங்க இதோ
இரணப்பதிவிருக்கிறார்களே
என்னிடத்தில் பாவம்மீறல்
இல்லாமலிருந்தும் வல்லோர்
எனக்கெதிர்க் கூட்டங்கூடினர்
என்னிடத்திலக்கிரம மில்லாமலிருந்துமிதோ
எங்குமேஒடித்திரிந் தெத்தனமுமாகிறார்கள் – என்
3 என்னையேறிட்டுப் பாரும்
சேனைத்தெய்வம் ஏகொவாவே
இசரவேல்ச் சுவாமிதெய்வமே
என்னவிதச் சாதியையும்
இப்பஞாயங்கேட்டிடநீர்
எழும்பும் எழும்பிநில்லுமே
வன்மித்தேஆங்காரமாய்த்
துரோகங்கள் செய்யும்எந்த
மனிதர்க்கும் இரங்கிடாதையும்
உன்னிநாய்போலலர்கள்
சாயங்காலம் திரும்பிவந்து
ஊரைச்சுற்றிக் குலைத்துக்கொண்டு
ஒடியோடித் திரிகிறார்கள் – என்
4 இதோதங்கள் வாயினாலே வாதாடுவார்களவர்கள்
உதட்டில்க்கூர்ப் பட்டயமுண்டு
அதைக்கேட்போன் ஆரென்பார்கள்
ஆனால்என் எகோவாநீர்
அவர்களைமிகவும் நகைப்பீர்
பதிவைக்கும்இந்தவிதச் சகலமாஞ்சாதியையும்
பரிகாசம்பண்ணிடுவீர் நீர்
கதியானஅவனுடைய
வல்லமையைக்கண்டுமக்கு
காத்துக்கொண்டுருக்கிறேன்
காலத்தைநெகிழ்ந்திடாமல் – என்
5 தெய்வமோ எனக்குயர்ந்த
அடைக்கலம்கிருபையின் என்
தெய்வம் நேரிட்டுவருவார்
தெய்வமோஎன்னை யெந்தன் பகைஞரில்நீதிசரி
செய்குதல் காணச்செய்குவார்
அய்யமற எம்கேடைய மாகிய ஆண்டவரே
அதென்சனம் மறந்திடாமலே
மெய்யாகவுமதுபுய பெலத்தாலேயவர்களை நீர்
வீணிலேயலையச்செய்து
தாழ்மைப்படுத்திவையும் – என்
6 அவர்களி னுதட்டுப் பேச்சாம்
அனைத்துமே அவர்கள்வாயில்
ஆகட்டும்பாவநோய்போல
அவர்கள்பொய் சற்பனைக்கு மகாத்தம்மகந்தையில்
அவர்களே சிக்கிக்கொள்ளட்டும்
அவனியெல்லைமட்டுந்தெய்வம்
யாக்கோபிலாள்வரென்று
அவர்களுற்றுணர்ந்துகொள்ளவே
அவர்களிங்குமதுகோபத் தழிந்துநிற்மூலமாகி
அந்திநாய்போல் ஊர்திரும்பி
அலைந்துகுலைத் தோடிடட்டும் – என்
7 தீனியைவயறாத் தின்கக்கிட்டா திருந்தவர்கள்
தியங்கியே யுழுமியோடட்டும்
ஊனநாள் எனக்குநீரே உயர்தஞ்சம் அடைக்கலமு
மானீரென்றுமது வல்லமை
வாய்நாவால்ப்பாடிடுவேன் காலையிலுமதுகிருபை
மகிழ்ச்சியாய்ப் புகழ்ந்துசொல்லுவேன்
சேனைச்சுவாமிஎனக்குயர்ந்த
திரந்தஞ்சம்கிருபைத் தெய்வ
மானாரென்றவரை நான்
அதனமாய்ப் பாடிடுவேன் – என்