58 சங்கீதம்
58 சங்கீதம்
வெண்பா
தான்கெட்டுப்போகாமல் தாவீ துபாடினதும்
மேன்மையாம்ராகத் தலைவனுக்கு ஞானமாய்
ஒப்படைத்துவிட்டதுமா யோதுதலாகிவந்த
பொற்பணதி கீதமது வே
கலியாணி ஏகதாளம்
ஊமையாகவேயிருந்தால் நீதிசொல்வீரோ ஒருவன்
ஊமையாகவேவிருந்தால் நீதிசொல்வீரோ வழக்கில்
ஊமையாகவேயிருந்தால் நீதிசொல்வீரோ ஏழை
ஊமையாகவேவிருந்தால் நீதிசொல்வீரோ
1 நேர்மையாகச் சொல்வீரோ
நியாயத்தை உண்மையாய்
நிதானமாய்ச் சொல்வீரோ
நீங்கள் மனுப்புத்திரரே – ஊமை
2 ஞாயவிரோதத்தைநீங்கள் நெஞ்சறியவே செய்து
நாடுபூமியில் உங்கள்கையின் கொடுமையை
வாயினால்மனிதர்க்கு நிறையினால் விற்கிறீர்கள்
மாறுபாடாகிறீர்கள் நீங்கள் மனுப்புத்திரரே – ஊமை
3 தாய்கெற்பமுதற்கொண்டே பேதலிப்பர்கள் மகாச்
சாபமானஆகாத மாந்தரானோர்கள்
வாய்ப்பேச்சுப்பொய்யரும் அதுமுதல்வழிதப்பி
மாறுபாடாகிறார்கள் பாரும்மனுப்புத்திரரே – ஊமை
4 சற்பநஞ்சுபோல்விசங்கள்
அவர்கள்கொண்டனர் முனங்குந்
தம்பனச்சத்தம் மந்த்ரங்கேட்டிடாமலே
எப்பவுஞ்செவியடைத் திடுகிறபாம்புபோல
இவர்களிங்கிருப்பார்கள்
பாரும்மனுப்புத்திரரே – ஊமை
5 தெய்வமானநீர் அவர்கள்
வாயின்பல்க்களைத் தகர்த்துச்
சிங்கக்குட்டிகள்கடைவாய்ப் பல்லைநொறுக்கிடும்
தொய்யவேகழிந்திடும்
தன்போக்குத் தண்ணீர்போல்
தொலையட்டும் எகோவாவே
சுருக்காயவர்கள் உலகினிலே – ஊமை
6 கணையைத்தப் வில்மேல்ப்பூட்ட
நொறுங்கிப்போகட்டும் அவர்கள்
கரைந்துழன்றுபோம்நத்தை போலேயாகட்டும்
கனஈனச்சாப்பிள்ளை போலவேசூர்யனை
காணாதே போகட்டும்
காண்பர் அதை மானிடர்கள் – ஊமை
7 உணருமுன்னுங்கள் முள்க்கள்
முட்காடாயிற்று அது
உள்ளேபச்சையாயிருக்கிற போதிலுங்கூட
கனசினப்புசலினால்க் கடந்தோடச்செய்குவார்
கற்தராம் எகோவா
காண்பீர்மனுப் புத்திரரே – ஊமை
8 நீதியாய்ப்பதில் நடக்கும்
நல்லசெய்கையைத் தன்கண்
நேர்மையாகவேகாண்கும் நல்லநாள்த்தன்கால்
நீதிமான்கழுவுவான் ஆகாதோன் ரத்தத்தில்
மெத்தவும்மகிழுவான் காண்பீர்மனுப்புத்திரரே – ஊமை
9 மெய்யாயப்போதுஎந்த நீதிமானுக்கும் ஏற்ற
வெகுபலன்களிங்கென்றும் உண்டுஉண்டென்றும்
மெய்யாகப்பூமியில் ஞாயத்தைச்செய்விக்கும்
தெய்வம் ஒன்றுண்டென்றும்
மனிதன் வாயால்ச் சொல்வானே – ஊமை