56 சங்கீதம்
56 சங்கீதம்
விருத்தம்
பெலிஸ்தியர்கள் தாவீதைக் காத்தூரினில்ப்
பிடிக்கவந்தவேளையிலே யவன் தூரத்தில்
நலிந்திருக்கும் இனங்களுக்குள் ஊமையான
நற்புறாவின் மேல்ப்பாடுந் துயரப்பாவாய்
ஒலித்திடவே ராகத்தின் தலைவனுக்கு
ஒப்புவித்தபொற்பணதி கீதந்தானே
ஒலித்திடவே ராகத்தின் தலைவனுக்கு
ஒப்புவித்த பொற்பணதி கீதந்தானே
சங்கராபரணம் ஆதிதாளம்
மனுடன்தான் எனையே விழுங்கப் பார்க்கிறான்
அனுதினம் எனைப்போர் செய்தே யொடுக்கிறான்
ஆகையால் எனக்கிங் கிரங்குந் தெய்வமே
1 தினமும் எனது பகையாளிகள்
எனையே விழுங்கப் பார்ப்பார்கள்
கனமாம்உயரத்திருந்தென்மேல்ப்போர்ச்செய்வோர்கள்
அநேகராக இருக்கிறார்கள் – மனுடன்
2 நானஞ்சும் நாளிலும்மை நம்புவேன்
நான்தெய்வ வார்த்தைநிமித்தம் நன்றாகஅவரையே
வாழ்த்திப்புகழ் சொல்லுவேன்
நான்கற்தாவை நம்பியே
யிருக்கிறேன்நான் அஞ்சேனே
மாங்கிசத்தா லெனக்கிங்னென வந்திடும்
நான்தெய்வத்தை நம்பினேன் – மனுடன்
3 தினந்தினம் எனதுவார்த்தை புறட்டுவர்
நினைவெல்லாம் எனக்குவிரோதமாகவேபொல்லாத
வினையஞ்செய்ய வைப்பார்கள்
தினுசாய்க்கூடிப் பதிவாயிருந்தென்
சீவன்போக்க ஆசையாய்
எனதுஅடியைப் பிடித்துவரும் இவர்கள்தம்
இடும்பில்மேல்ப்போவார்களோ – மனுடன்
4 சனத்திரள் கீழேவிழ உம்முடை
சினத்தையே தாக்கிவிடுந் தெய்வமே
நினைந்திட்டீர் நீரென்னுடை அலைதலை
எனதுகண்ணீர் உமதுசிந்தை
யிடங்கண்டிடச் செய்திட்டீர்
இனமாய்ச்சரியாய் இதுகளுமது கணக்கிலே
இருக்கிறதே யல்லவோ – மனுடன்
5 மன்றாடி உம்மைநோக்கும் நாளிலே
பின்னிட்டே என்பின்பகைஞர் திரும்புவர்
என்பட்சந்தெய்வ மிருப்பதறிவேனே
எகோவாவை நான் அவருடைய
வார்த்தைநிமித்தந் துதிப்பேனே
எகோவாவை நான வர்சொல் நிமித்தந் துதிப்பேனே
யான்தெய்வத்தை நம்பினேன் – மனுடன்
6 நரனெனக் கென்னசெய்வான் பயப்படேன்
பரனுமக் குடைத்தநேர்த்திக் கடனென்மேல்
சுமர்வதால்க் தோத்ரம் உமக்குச் செலுத்துவேன்
பரம்முன் சீவ னுள்ளோரொளியில்
நடப்பதற் கென் னாத்துமம்
மரணத்துக்கும் என்கால்இடர்க்கும் வெவ்வேறாய்
வாய்க்கா தகலச் செய்வீரே – மனுடன்