54 சங்கீதம்
54 சங்கீதம்
வெண்பா
கிண்ணார வாத்தியங்கள் கெட்டியாய்க்கொட்டுகின்ற
இன்னிசையில்ப் பாட இராகத் தலைவனுக்கு
மன்னனாந் தாவீது வாஞ்சையாய் ஒப்புவித்த
விண்போத சங்கீத மே (1)
தாவீது எங்கள் தலத்தி லொளித்திருந்து
தாவுகிறானென்று சவுலிடத்தில் மேவியே
சீப்பூரார் கோள்ச்சொன்ன தீவினைநாள் தாவீது
பாப்படுத்துஞ் சங்கீதமே (2)
சைந்தவி சாதபுதாளம்
தெய்வமே நீரென்னை
உமதுநாம நிமித்தம் இரட்சியும்
1 செய்யும்ஞாயம் உமது பெலத்தால்
செபம்செய்யும் என்னைக்கேளும்
செவிகொடும் என்வாயின் சொற்கட்கு – தெய்
2 அன்னியரோ என்னை எதிர்த்தோர்
ஆ! என்னுயிரைப் பெலவான்கள்
பின்னமாக்க எழும்பிக் கொண்டார்கள் – தெய்
3 தங்கள்முன்னே தெய்வத்தையே
சற்றும் நிறுத்தி நோக்கிடார்கள்
இங்கிதோ! நீர்எனது சகாயர் – தெய்
4 ஆண்டவர்நீர் என்ஆன்மாவை
ஆதரிப்போர்க் குள்ளே யிருப்பீர்
மீண்டும்பகைஞர் கழிவு சரிசெய்வீர் – தெய்
5 உமதுசத்யத் திடத்தினிமித்தம்
உகந்துகொல்லும் அவர்களைநீர்
உமக்குச்சாகப் பெலியைச் செலுத்துவேன் – தெய்
6 ஏகோவாவே உமதுநாமம்
இருக்கின்றதே நலமாக
வெகுவாய் உம்மைத் துதிசெய்குவேன் – தெய்
7 எந்தன்நெருக்க மெல்லாம் விலக்கி
என்னை மீட்பார் பகைஞர் மீதில்
என்கண் நீதிப் பதிலைச் சரிகாணும் – தெய்