52 சங்கீதம்
52 சங்கீதம்
குறள் – தாவீது ராகத் தலைவனுக்கு ஒப்புவித்த
பாவான போதகப் பாட்டே
1 – வது பங்கு வச.1 – 7
இந்துஸ்தானி காம்போதி ஆதிதாளம்
பெலவானே என்பொல்லாங்கில்ப்
பெருமைகொள்வாய்
1 நலமான தெய்வகிருபை
நாள்தோறும் உள்ளது – பெல
2 கவடுசெய்யுஞ் சவரகன் கூர்க் கத்திபோலுன்
அவநாக்குக் கேடுபாட்டை
ஆயித்தஞ்செய்யும் – பெல
3 நன்மைவிட்டு தீமையைநீ நாடிக்கொண்டாய்
நன்னிதானப் பேச்சைவிட்டு
பொய்யைச் சொன்னாய்நீ – பெல
4 விழுங்குவதற் கான எல்லா விரோதச் சொற்களும்
முழுக்கவட்டு நாக்குமுனக்கு
முற்றும் பிரியமாம் – பெல
5 தெய்வம் உன்னை யென்றென்றைக்கும்
செய்வார் நிற்மூலம்
தெய்வம் உன்னை யென்றென்றைக்கும்
செய்வார் நிற்மூலம் – பெல
6 தாவுமுன்னை வீட்டைவிட்டு சாமிபி டுங்குவார்
சீவனுள்ளோர் தேசத்திராமல்த்
தீரஒழிய வைப்பார் – பெல
7 அதை நீதிமான் காண்பானே அஞ்சி நகைப்பான்
இதோதெய்வந் தன் பெல னென
எண்ணான் இவனென்பான் – பெல
8 தன்பணத்துத் திரட்சி நம்பித் தன் தீவினையில்த்
தெம்பிச்சவன் இவனென்று
சிரிப்பார்களே – பெல
2 – வது பங்கு வச.8 – 9
சுவாமியின்வீட்டில்ப் பச்சை யான
ஒலிவ மரம்போ லிருப்பேன் ஆம் நான்
1 சுவாமியின்கிருபையை எப்போதைக்கும் இங்கே
சொல்வேன் என்றும் நானே
துத்தியஞ் செய்குவேன் – சுவாமி
2 அதைச்செய்து முடித்தவர்
அவர்தாமே யென்றவரை
பதத்தோடே யென்றைக்கும்
பாடிக்கொண் டாடுவேன் – சுவாமி
3 ஆளானேன் உம்மாலென்
றாண்டவர் நாமத்தை
மீளவும் என்றைக்கும்
மேன்மையாச் சொல்லுவேன் – சுவாமி
4 தெய்வத்தின் நாமத்தைச்
செமந்ததற்கிருப்பேன் நான்
தெய்வவிசேடத்தார்
முன்அது சிறக்குமே – சுவாமி