51 சங்கீதம்
51 சங்கீதம்
குறள் – ராகத் தலைவனுக்கு ராசனாந் தாவீது
பாகமா யொப்புவித்த பாட்டு
வெண்பா
தாவீது பற்சேபாள் தன்னைத் தழுவினதால்
தேவனின் தீர்க்க தெரிசியாம் நாத்தானைக்
கோவமா யேகோவா கொண்டுவந்த நாளிலந்தத்
தாவீது தமைத்ததிந்தப் பாட்டு
எதுகுலகாம்போதி திரிபுடைதாளம்
உமதுநற் கிருபையால்
இரக்கத்தைக் காட்டிடுந் தெய்வமே உமது
சுமைதியா மிரக்கத்தா
லென்பாவங் கழுவுமே தெய்வமே
1 அக்ரமம் நீங்கிட
முழுமையுங் கழுவுமே தெய்வமேஎனது
அகோரப் பாவங்கள்
அறச்சுத்தம் பண்ணுமே தெய்வமே
வெட்கத்தோ டென்னுடை
மீறுத லறிகிறேன் தெய்வமே எனது
வீண்பாவம் எப்போதும்
என்முன்னே நிற்குதேதெய்வமே – உமது
2 நீதியாய் விளங்குவீர்
உம்முடைவசனத்தில்த் தெய்வமேநீர்
நியாயத்தீர்ப் பளிக்கையில்ப்
பரிசுத்தம்விளங்குவீர் ஆதலால்
பாதகம்உமதுகண்
முன்னே நான் செய்ததைத் தெரிவித்தேன் கொடும்
பாவத்தை உமக்கெதி
ராகத்தான்செய்தேனென் றறிவித்தேன் – உமது
3 துற்குண மாகநான்
கெற்பத்தி லுருவானேன் தெய்வமே ஆதித்
தோசத்தி லென்னுடை
தாய்கெற்ப மாகினள் தெய்வமே
உட்கருந் துண்மையா
யிருக்கநீர்வீரும்புவீர் தெய்வமே எனக்கு
உள்ளுக்குள் ஞானமே
தெரிந்திடச்செய்குவீர் தெய்வமே – உமது
4 அகற்றுமென் பாவத்தை
ஈசோப்பால்ச் சுத்தமே யாக்கிடும் வெண்மை
யாகவே உறைந்திடும்
மழைபோல கழுவியே வைத்திடும்
மகிழ்ச்சியாய்க் களிப்பாக
நானதைக் கேட்கட்டும் அப்போது உமது
வலுத்தவல் லடியினால்
முறிந்தஎன் னெலும்புகள் களிகூரும் – உமது
5 என்பாவம் பாராமல்
உம்முடைமுகத்தை நீர் மறையுமே நீர்
என்னுடைமீறுதல்
யாவையும் நீக்குமேதெய்வமே
என்நெஞ்சில் மெய்யான
ஆவியைப்புதிதாகச் செய்திடும் சுத்த
இருதயம் எனக்குள்ளே
யேற்படச் சிருட்டியுந் தெய்வமே – உமது
6 பரிசுத்தஆவியை
என்னைவிட்டெடுத்துக்கொள் ளாதேயும் உமது
பரிசுத்த சமுகம் விட்
டென்னைத் தள் ளாதேயுந் தெய்வமே
திரும்பவும் உம்முடை
இரட்சிப்பின் சந்தோஷந் தாருமே மகிழ்ச்சி
இருதயத்தாலென்னைத்
தாங்கிநின் றருளுமே தெய்வமே – உமது
7 பாதகர்க் கப்போநான்
உம்முடைவழிகளைப் போதிப்பேன் கொடும்
பாவிகளுங்கூட
உம்மண்டைதிரும்புவர் தெய்வமே
நாதனே ரட்சிப்பின்
தெய்வமே ரத்தத்தின்பழிகளுக் கென்னை
நரசீவ தயவினால்
நீக்கியே விடுவியும் தெய்வமே – உமது
8 என்நா வப்போ உமது
நீதியைப் பூரிப்பாய்ப் பாடிடும் எனது
எசமானே என்னுடை
உதடுகள் திறந்திடச் செய்யுமே
என்நாவோ அப்போது
எகொவாவாகிய உமது நல்ல
இன்பமாந் துதிகளை
யாவர்க்கு மறிவிக்குந் தெய்வமே – உமது
9 சாமிநீர் வெறும்பெலி
விரும்பிடீர்விரும்பினால்ச்செலுத்துவேன்மற்றுஞ்
சருவாங்கத் தகனங்கள்
உமக்குநற் பிரீ தியுமாகுமோ
சாமிக்கிங்கிசைந்திடும்
நற்பெலி நொறுங்குண்ட ஆவிதான் சாமீ
தகர்ந்தோடி நொறுங்கின
இதையத்தைத் தள்ளவு மாட்டீரே – உமது
10 சீயோனுக் கும்முடை
பிரியத்தின் படி நன்மை செய்யுமே அந்தச்
செருசலேம் மதில்களைத்
திரும்பவுங் கட்டுமே தெய்வமே
ஞாயமே அப்போது
சருவாங்கத் தகனமும் பலியும் ஆகும்
நற்காளைப் பெலியெப்போ
பீடத்தி லுமக்குச் செய் வார்களே – உமது