5 சங்கீதம்
5 சங்கீதம்
குறள் – நெகிலோத்தில் ராகத்தலைவன் படித்த
மகிபனாந் தாவீ தின் பாட்டு
1 வது பங்கு. வச. 1 – 3
கலிப்பா
1 என்வார்த்தைக்கென் தெய்வமே
இரக்கமாய்ச் செவி கொடுத்து
என் மனதின் தியானங்கணக்
கேற்றியேயுணர்ந்துகொள்ளும்
2 என்னரசே என் தெய்வமே
என் சத்தத்தைக் கேட்டருளும்
என்னுடையமன்றாட்டை
யேற்றுவேனும்மிடத்தில்
3 காலையிலே கேட்டருளும்
கற்தாவேயெனது சத்தம்
காலையில் வந்தும்மிடத்தில்க்
காத்திருபேன் பணிவுடனே
2 வது பங்கு. வச. 4 – 6
சயிந்தவி ரூபகதாளம்
1 தேவரீரொரு தீமையையுந்
தேடி விரும்புமோர் தெய்வமல்ல
பாவியும் முடை சமுகந்தன்னில்ப்
பதுங்கி நிற்கவோரிடமுமில்லை
2 பெருமைக்காரர்கள் நிலைப்பதில்லை
பெலத்த உம்முடை கண்கள் முன்னே
வெறுப்பீரக்ரமக்காரர்களை
முழுக்கப்பகையாகப் பகைத்திடுவீர்
3 ஏத்தும் பெய்யராய் அனைவரையும்
ஏகோவாவே நீர் அழிப்பீரே
றெத்தப்பிரியனைச் சூதனையும்
றெம்பவெறுப்பாகப்பார்த்திடுவீர்
3 வது பங்கு. வச. 7 – 10
வெண்பா
தேவனுமது திரளாங்கிருபையால்ச்
சேர்வேனுமதுதெய் வாலயத்தில்த் – தேவ
பயங்கொண்டுமது பரிசுத்த வீட்டில்
நயந்து பணிந்துகொள்வேன் நான்
நாகவராளி ரூபகதாளம்
நீதிதன்னிலென்னை நடத்தி என்முன்
நேர்மையாக்கும் உமது வழியை
1 ஆதிமுதலான என
தாண்டவனாம் ஏகோவாவே
பாதகர்களான எனது
பகைஞர்கள் நிமித்தியமாய் – நீதி
2 அவர்கள் வாயில் உண்மையில்லை
அவர்க்ளுள்ளங்கேடுபாடு
அவர்கள் தொண்டை திறந்து வைத்த
அழிபிரேதக் குழியேயாகும் – நீதி
3 தங்கள் வாயாலிங்கவர்கள்
சாற்றுவார்களிச்சகங்கள்
தங்களின் நல்லாலோசனை
தவறித்தாழ்ந்து விழுந்திடட்டும் – நீதி
4 அவர்களை நீர் குற்றமுள்ளோ
ராக்கிவிடும் அவர்கள் துரோகக்
குவியல் நிமித்தம் அவர்களை நீர்
குப்பை போல தள்ளிப்போடும் – நீதி
5 உம்மைவெறுத் தவர்களிங்கே
உம்முடைய கட்டளைக்குச்
செம்மையாக நடந்திடாமல்ச்
செய்தார்கள் கலகச்செயல் – நீதி
4 வது பங்கு. வச. 11 – 12
நாதநாமக்கிரியை ஆதிதாளம்
கெம்பீரமாக உம்மில் மகிழ்ந்திடட்டும் நாங்கள்
கெம்பீரமாக உம்மில் மகிழ்ந்திடட்டும்
1 என்பரனே உம்மை நம்பிக்கொண்டவர்கள் இங்கே
எல்லாரும் ஆனந்தமாய் என்றென்றைக்கும் – கெம்
2 கர்த்தர் நீர் அவர்களைக் காப்பாற்றுவீர் உமது
காரண நாமமவர்கள் வாஞ்சையாமே
சத்தியமாய் நீதிமானை யாசீர்வதித்தே அவனைத்
தயவென்னுங்கேடயத்தால்ச் சூழ்ந்துகொள்வீர் – கெம்