49 சங்கீதம்
49 சங்கீதம்
குறள் – கோராகின் புத்திரரின் ராகத் தலைவனுக்கு
நேராக ஒப்புவித்த பாட்டு
குறிஞ்சி (ஆனந்தக்களிப்பு ) ஆதிதாளம்
சனங்களின் கூட்டங்களான நீங்கள்
சகலமாம் மனிதரும் கேளுங்கள் இதையே
1 பணக்காரர்எளியோர்கள் பெரியோர் சிறியோர்
பரவியேயொருமித்த உலகத்தின் குடிகாள் – சனங்
2 என்னுடைவாய் ஞானம்பேசும் எந்தன்
இதையத்தின் தியானமே புத்தியாயிருக்கும்
என் செவி உவமைக்குச் சாய்ப்பேன் இப்போ
என்புதை பொருளை நான் வீணையால் விடுப்பேன் – சனங்
3 தம்திரளாஸ்தியால்வீம்பு பேசி
தங்களின்பணம்நம்பி என்னையிங்கொடுக்கும்
அன்பற்றோர் அக்கிரமம் என்னைச் சூழும்
அழிம்பானநாட்களில் பயப்படமாட்டேன் – சனங்
4 இனியழிவென்றைக்குங் காணா துயிரோ
டிருப்பதற்கவர்களில் யாருந்தன்பிறவி
மனிதனைமீட்கவும் அவனை மீட்கும்
வகையானபொருளையுஞ்சுவாமிக்குக்கொடுக்கான் – சனங்
5 அவர் களினாத்துமமீட்பு என்றும்
அவர் கட்கு நடவாது அதுஎன்று முயர்த்தி
புவியிலே நின்மூடன்மிருகக் குணத்தோன்
தவஞானிதானுமே ஒன்றுபோல்ச்சாவான் – சனங்
6 அவர்கள் தம்மாஸ்தியைவேறே மனிதர்
அனுபவஞ்செய்யப்பின் வைப்பதே இயல்பு
அவர்கள் தம்வீடுகள் நித்ய காலம்
அழியாத தலைமுறை வாசஸ்தலமென்பார் – சனங்
7 ஆகும்இஃதவர்களினுள்ளத் தாசை
அவர்கள்தம் பேர் நாமம் நிலங்களுக்கிடுவர்
ஆகிலும் அவ்விதமேன்மை மனிதன்
அதில்த்தங்காதழிந்துபோம் மிருகம்போலவான் – சனங்
8 இவ்வழி அவர்களின் கிறுக்கு அவர்கள்
இளைஞரும்அவர்கள்வாய்ச்சொல்லை உட்கொள்வார்
வெவ்வேறாய்ஆடுபோல் நரகில் மலர்ந்து
விழுவார்கள் மரணமோ அவர்களைமேயும் – சனங்
9 அவர்களைச் செம்மையானோர்கள் அங்கே
ஆண்டுகொள்வார்களே விடியற்காலத்தில்
அவர்கள் தங்குடியிருப்பிழந்து அகல்வர்
அவர்களினுருவையோ பாதாளம்அழிக்கும் – சனங்
10 என்னான்மா இணைப்பையோதெய்வம் நரக
இடுக்கமாம்வல்லமைக் ககற்றியே மீட்பார்
என்னைத் தம் மிடஞ் சேர்த்துக்கொள்வார் ஆமாம்
என்னையே யவர் சேர்த்துக்கொள்ளுவார் என்றும் – சனங்
11 ஆஸ்திமான் ஒருவனின்வீட்டு மகிமை
அதிகமாய்வரும்போது பயப்படாதிருநீ
பேர்த்துப்போகா னதிலொன்றும் சாவில்
பின்தொடர்ந்தேகாதே அவனுடைமகிமை – சனங்
12 அவன்சீவ னுள்ள நாளளவில் தனது
ஆன்மாவைப்புகழ்ந்தவன் வாழ்த்திக் கொண்டிருப்பான்
அவனைநீ பாக்கியவானென்று மனிதர்
ஆனந்தமாக்கியே புகழ்ந்திடுவார்கள் – சனங்
13 ஆகிலும்அவனான்மா என்றும் மங்கி
அழியாத வெளிச்சத்தைக் காணாத தனது
ஆகாதபிதாக்களும் பேயும் ஒன்றாய்
அணுகிய சந்ததி வரிசையைச் சேரும் – சனங்
14 முக்கியம்பெற்றிருந்தாலும் புத்தி
மோசமாய்வாழ்ந்திடும் மனுசனானவனோ
உக்கியேயழிந்துபோம் மிருகக் குலத்துக்
கொப்பாகத்தானவ னிருக்கிறான் நிசமே – சனங்