48 சங்கீதம்
48 சங்கீதம்
குறள் – கோராகின் புத்திரர்க்கு நேராக ஒப்புவித்த
சீரான சங்கீதப் பாட்டு
நாதநாமகிரியை ஆதிதாளம்
எகோவாபெரியவர் எகோவாபெரியவர்
வெகுதோத்திரம் ஏற்பவரே எங்கும்
வெகுதோத்திரம் ஏற்பவரே தெய்வ,
1 நகரத்திலும் நமது சுத்த
தகத்தாம் மலையினிலும் – எகோவா
2 சீயோன்மலை தானும்வட புறத்தினிலிருக்கும்பெரிய
ராயன்நகருங் கூடச்சேர்ந்து அழகாம்
நல்நிதான நிலையுமாச்சே பூமிக்
கெல்லாம்நன் மகிழ்ச்சியாச்சே தெய்வம்
நல்லதான அடைக்கலமாய் அதின்
நல்லரண்கள் மேல் விளங்குவார் – எகோவா
3 அரசர்கள்ஒன்றுகூடி ஆக்கிரமித் தெதிர்த்தும் அதில்
வெருண்டுபின் வாங்கினார்கள் மகா
விரைவாகத் தெறிபட்டார்கள் மெத்த
அருண்டுபின்வாங்கினார்கள் பெண்கள்
கருப்பத்தின் வேதனைபோல் அவர்கள்
வருத்தத்தை யடைந்திட்டார்கள் – எகோவா
4 தற்சீசீன் கப்பல்களை கீழ்காற்றால்உடைத்துவிட்டீர்
சங்கதி நாம் கேட்டதுபோல் சேனைக்
கற்தருடைய நகரில்க் கண்டோம் நமது
தற்பரனின் நகரில்த்தானே தெய்வம்
நித்தியகாலமாக அதை
மெத்தவுமே உறுதிசெய்வார் – எகோவா
5 தெய்வமே உம்முடைய தெய்வாலய நடுவில்ச்
சிந்திப்போம் உமதுதயவை உமது
திவ்விய நாமம்போல அதைத்
தவ்வியநற் புகழுமுண்டு பூமித்
தலஎல்லை மட்டும் அதுண்டு உமது
வலதுகரம் நீதி நிறையும் – எகோவா
6 தெய்வமே உமதுஞாயத் தீர்ப்புகள் நிமித்தமாகச்
சீயோன்மலை மகிழ்ந்திடுமே யூத
ஒய்யாரப்பெண்கள் களிப்பர் அந்தத்
துய்யசீயோன் நகரை நீங்கள் எங்குஞ்
சுற்றியே வளைந்துவாருங்கள் அதின்
கொத்தளங்க ளெண்ணிக்கொள்ளுங்கள் – எகோவா
7 கோட்டைமேல் மனம்வைத்ததின்
வீட்டரணொவ்வொன்றா யெண்ணித்
தீட்டுங்கள்பின் மனிதருக்கு இந்தத்
தெய்வம்நித்ய காலமாக நமது
தெய்வமாக இருக்கிறாரே இவர்
தீங்கான மரணத்துக்கும் நம்மை
நீங்கலாக்கி விடுபவர் தான் – எகோவா