47 சங்கீதம்
47 சங்கீதம்
குறள் – கோராகின் புத்திரரில் ராகத் தலைவனுக்குக்
கோர்வையாஞ் சங்கீதமே
காப்பி ஆதிதாளம்
பூரிப்பானசத்த மாய் முழங்குங்கள் கையால்ப்
போற்றிக்கொட்டுங்கள் சகல கோத்திரங்களே
1 பாரிஉன்னத மான எகோவா
பயங்கரர் பூமிமீதெங்கு மகாராசர் – பூரிப்
2 எகொவாசகல சாதிசனங்கள் நமக்
கேற்கக்காலின் கீழடங்கி நிற்கச்செய்குவார்
சேகையாக்கோபின் நேசமுக்கியம்
தெரிந்துசுதந்திர மாகத் தந்தருளுவார் – பூரிப்
3 தேவ னாம்எகோவா ஆர்ப்பரிப்போடுந் தொனி
சேரெக்காளத் தொனியோடும் ஏறுகிறாரே
தேவனாம்ராசற்குக் கீர்த்தன கீர்த்தனஞ்
சிறந்து பாடிக்கொண் டாட்டஞ்செய்யுங்கள் – பூரிப்
4 பூமி மீதெங்குந் தெய்வம்ராசரே அவரைப்
போதகசங்கீதம் பாடிப்போற்றுங்கள்
சாமிசாதிகள் மீதெல்லாம்ராசர்
தமதாசனத்தின் மீதிலுட்காருவர் – பூரிப்
5 பூமி மகாசனத்துப்பிரபுக்கள்ளெல்லாம் ஆபிர
காமின் சுவாமியின் சனங்களாகச்சேருவர்
பூமியின்கேடயஞ் சுவாமியினுடையதே
புண்ணியராமவர் மிகவுமுயர்ந்தவர் – பூரிப்