46 சங்கீதம்
46 சங்கீதம்
வெண்பா
ஆல்மோத்தில் வாசிக்கக் கோராகின் அங்கிசத்தில்
மேலாளாய்ப் பாட்டை விளம்பியே ஆலயத்தில்
பாடினவனுக்குப் பதிவாக ஒப்புவித்த
பாடலாங்கீதமிந்தப் பாட்டு
காம்போதி ஆதிதாளம்
திறமும்நல் அடைக்கலமுந் தெய்வம் நமக்காகினாரே
நிறைவனுகூலம் அவர் நெருக்கங்களிலே
1 தறைமலைபற்வதங்கள் தளம்பி நிலைமா றினாலும்
சமுத்திரத்துப்பெருக்கிலது சாய்ந்தும் அஞ்சோமே – திறமும்
2 தெய்வநகர் உன்னதத்தின் திவ்வியகூடாரஸ்தலஞ்
சிறக்குமாற்றின் கால்களாலும் ஆற்றினாலுமே
தெய்வம்அதின் நடுவிருப்பார் சற்றும்அதுஅசையாதே
தெய்வதுணையதுக்கு இங்கே சேருங்காலையில் – திறமும்
3 சாதிகளுங்கொந்தளிக்குந்தத்தளிக்கும்ராச்சியங்கள்
சாமிசத்தம்முழங்கும்போது தறணியுருகும்
நாதரானசேனைக்கற்தர் நம்முடனே கூடுடிவார்
நல்லடைக்கலம் நமக்கு யாக்கோபின்தெய்வம் – திறமும்
4 பூமியிலேபாழ்க்கடிப்பைக் கற்தர்செய்வார் பாருங்களே
பூமியெல்லைக்கடைசிமட்டும் யுத்தம் ஒய்விப்பார்
சாமிவீரர் வில்லொடித்து ஈட்டிமுறித்தெறிந்திடுவார்
தளத்தின்பெலனாம்ரதத்தைக் கொளுத்திடுவாரே – திறமும்
5 சாதிகளுக்குள் உயர்வோம்பூமியிலே உயர்ந்திருப்போம்
சற்றேஒய்ந்துநாமேதெய்வம் என்றறியென்றார்
நாதரானசேனைக்கற்தர் நம்முடனே கூடிடுவார்
நல்லடைக்கலம்நமக்கு யாக்கோபின்தெய்வம் – திறமும்