44 சங்கீதம்
44 சங்கீதம்
குறள் – கோராகின் புத்திரரில் ராகத் தலைவனுக்குக்
கோர்வையாம் போதகப்பாவே
1 – வது பங்கு. வச.1 -3
ரீதிகவுளை சாபுதாளம்
எங்கள் பிதாக்கள் எங்களிடத்தினில் விவரித்தார்கள்
எங்களின் செவிகளாலே கேட்டோம்
1 தங்கள்நா ளானபூர்வ தருணத்தில்ச் சாமிநீரே
தயவாகநடப்பித்த சமாதானச் செயல்களை – எங்க
2 சாமிநீர் உம்முடைய சமர்த்துள்ளகையினாலே
சனத்திரள்துரத்தினீரே
சாமிநீர் எம்மையந்தச் சாதிகளிருந்தஇடத்
தமைந்திட நாட்டிவைத்தீரே
சாமிநீர் தாமே அந்தச் சனக்கூட்டத்தார்களையே
சருவதுன்பத் துட்படுத்தித்
தள்ளிவிட்டீரேயென்று – எங்க
3 தங்களுடைபட்டயத்தால் அவர்களித்தேசத்தையே
சம்பாதித்திடவுமில்லை
தங்களுடையபுயத்தாலல்ல சாமிநீர் அவர்கள்மேலே
தயவானதாலதாச்சு
அங்கவர்தமைஉமது புயமும்நல் முகஒளியும்
மங்களமாய்ரட்சித்து வந்தது வந்ததென்று – எங்க
2 – வது பங்கு. வச.4 – 8
அசாவேரி ஆதிதாளம்
தெய்வமே! நீரெனது செயராசாவே உயர்ந்த
தெய்வமே! நிரெனது செயராசாவே
1 செய்தருளும் யாக்கோபுக்குத்
தீர்ந்தநிறை வான மீட்பை
செய்தருளும் யாக்கோபுக்குத்
தீர்ந்தநிறை வான மீட்பை – தெய்வ
2 உம்மாலெங்கள் பகைஞர்களை
உரக்கமுட்டித் தள்ளிடுவோம்
எம்மேல்விழுவோர் தம்மையுமது
இதநாமத்தில் மிதித்திடுவோம் – தெய்வ
3 என்வில்லைநான் நம்பமாட்டேன்
இரட்சிக்காதென் கத்தியென்னை
என்வில்லைநான் நம்பமாட்டேன்
இரட்சிக்காதென் கத்தியென்னை – தெய்வ
4 என்மேல்வந்த எதிராளிகட்
கெம்மைநீக்கி ரட்சித்தீரே
எம்மைப்பகைத்த மானிடரை
இகழ்ந்துவெட்கப் படுத்தினீரே – தெய்வ
5 சாமிக்குள்ளே நித்தம்நித்தம்
மேன்மைதன்னைப் பாராட்டுவோம்
சாமிநாமம் என்றென்றைக்கும்
சங்கீதத்தால்த் தோத்திரிப்போம் – தெய்வ
3 – வது பங்கு. வச.9 – 16
ராமமனோகரி ஆதிதாளம்
எங்களைநீர் தள்ளிவிட்டு
இகழ்ச்சிக்குள் ளாக்குகிறீர்
1 எங்களுடைய சேனைகளுடனே
இப்போகூட நடவாதேபோறீர் – எங்க
2 எங்களைநீர் சத்துருவுக்
கிடைந்து பின்னிடச் செய்தீரே
எங்கள்பகைஞர் தங்களுக்கே
யென்றுகொள்ளை யாடினர்கள்
எங்களைநீர் ஆடுகள்போல்
இரையாய் ஒப்புக் கொடுத்தீரே – எங்க
3 எங்களைநீர் சாதிகளி
னிடத்தில்ச் சிதற அடித்தீரே
இங்கும்முடைய சனத்தையேநீர்
இலவசமாக விற்கிறீரே
பங்கமாமந்தக் கிரையத்தினால்ப்
பலனுமக்கொன்று மிருக்காதே – எங்க
4 சாங்கமாய்ச் சுற்றுப் புறத்தார்க்குச்
சக்கந்தம்பரியாசக் கேலியுமாய்
ஆங்காரிக்கும் அயலார்க்கு
நாங்கள் பழிப்பு மாகவைத்தீர்
நாங்கள் புறச்சாதிச் சனங்களுக்குள்
நகைப்புப்பழமொழி யாகவைத்தீர் – எங்க
5 சனக்கூட்டத்துக்குள் நாங்கள்
தலையையசைத்தற் கிடமானோம்
சினத்துக்குரோதந் தீர்ப்போனும்
தீங்குசெய்யுஞ் சத்துருவும்
தினந்தினம் நிந்தையாய்த் தூஷணித்துச்
சீறிச்சத்த மிடுகிறானே – எங்க
6 இந்தத்தீங்கு சமஸ்தமுமே
என்னைச்சூழ்ந்து கொண்டதினால்
எந்தன் இலட்சை ஈங்கிசையே
எனக்கு முன்னேயிருக்கிறது
எந்தன்முகத்தின் வெட்கமுமே
என்னைமூடிக் கொண்டதல்லோ – எங்க
4 – வது பங்கு. வச.17 – 21
துசாவந்தி ஆதிதாளம்
உம்மை நாங்கள் மறந்ததில்லையே எகொவாசுவாமி
உம்மைநாங்கள் மறந்ததில்லையே
1 எம்முடைமேல் இந்த எல்லா
இடுக்கமும் வந்திருந்தும்
உம்முடம்படிக்கை தன்னை
உழப்பித்திருகு செய்ததில்லை – உம்மை
2 எங்களை நீர் வலுசற்பங்கள்
இருப்பிடத்தில் நசுக்கிவிட்டு
எங்களை நீர் மரண நிழல்
இருட்டினாலே மூடினாலும்
எங்களிதையம் பின்வாங்கியே
யிருந்ததே இல்லை இல்லை
எம்காலடி உமது பாதைக்
கிடைந்துவிலக இல்லை இல்லை – உம்மை
3 எங்கள்தெய்வப் பேரைநாங்கள்
இகழ்ந்தன்ய தெய்வத்துக்கு
எங்களுள்ளங் கைகளையே
றெடுத்துவிரித் திருந்தோமானால்
எங்கள்தெய்வம் அதையாராய்ந்து
எதார்த்தமாகப் பார்த்திடாரோ
எங்கள் நெஞ்சின் மற்மமெல்லாம்
எதஷ்டமாகத் தெரிந்திடுமே – உம்மை
5 – வது பங்கு. வச.22 – 26
வெண்பா
உமது நிமித்தியம் ஒவ்வொரு நாளும்
அவமாய்க் கொலைசெய்யப் பட்டுச் சமையல்க்
கடிபடும் ஆடுபோ லாகவே எண்ணப்
படுகிறோம் சாமிபாரும்
ராமமனோகரி ஆதிதாளம்
ஆண்டவரே நீர் விழித்தருளும் எம்மை
அசட்டை செய்தேன் உறங்குகிறீர்
1 நீண்டகாலம் எங்களைநீர்
நெகிழ்ந்திடாமல் எழும்பிடுமே – ஆண்ட
2 ஏனுமதுசமுகத்தைநீர் இப்போ
எங்களுக்கு மறைத்திடுவீர்
ஏன்நீரெங்களின் சிறுமையையும் எங்கள்
இடுக்கத்தையும் மறந்திடுவீர்
கூனிவளைத் தெமதாத்மங்
குனிந்ததுவே புழுதிமட்டும் – ஆண்ட
3 எங்கள்வயறு தரையுடனே இப்போ
இசைந்தொட்டி யிருக்கிறதே
எங்களுக்குதவி யாகஇப்போ நீர்
எழுந்தருளுந் தற்பரனே
எங்களை உமது நல்லகிருபைக்
கென்றுமீட்டுக் கொண்டருளும் – ஆண்ட