43 சங்கீதம்
43 சங்கீதம்
வெண்பா
சன்மார்க்க மில்லாத சாதி யெனைவிலக
என்சுவாமி என்னைநீர் ஞாயம் விசாரித்து
என்வழக்கைப் பேசி அநியாயஞ் சூதாம்
மனுசற் கெனைவிலக்குமே
ஷகானா திரிபுடைதாளம்
என்பெலனானதெய்வம் நீர்தாம்
ஏனென்னைந் தள்ளுகிறீர்
1 என்னையென் சத்துரு ஒடுக்கிறதெம்பினால்
ஏன்முகங்கருத்து நான் திரிந்தலையவேணும் – என்
2 சாமிநீர் உம்முடைய வெளிச்சஞ்
சத்தியந் தன்னையும் நீர்
தாமதமில்லாமல் அனுப்பியே யதுகளால்
தயவுடனிங்கென்னை நடத்திவந்தருளுமே – என்
3 அதுகளாலும்முடைய விசேஷித்த
அரண்மலை யுயரத்துக்கும்
அதுகளால் அதின்மேலே யமைந்த இல் லிடங்கட்கும்
ஆனந்தமாக நான் வருகுதலாகுமே – என்
4 அதுகளா லென்னெகோவா பீடத்
தண்டையில் வந்தெனது
கெதியானமகிழ்ச்சியின் தெய்வத்தினண்டைக்குக்
கிட்டிணிசாகவே உட்பிரவேசிப்பேன் – என்
5 அதுகளாலென்னெனெகோவா வான
ஆண்டவா! என் தெய்வமே
துதிசெய்வேன் உம்மைநான் சுரமண்டலத்தினால்
தோத்திரமானந்த மாகவே பாடுவேன் – என்
6 என்னிலென் ஆத்துமமே முறிந்துடைந்
தேன்நிற்பாய் பரனைநம்பு
இன்னமென்முகத்துக்குக் குறையற்ற ரட்சிப்பும்
என்தெய்வமுமென்று அவரைநான் துதிசெய்வேன் – என்