42 சங்கீதம்
42 சங்கீதம்
குறள்- கோராகின் புத்திரரில் ராகத் தலைவனுக்கு
கோர்வையாம் போதகப்பாவே
சங்கராபரணம் திரிபுடைதாளம்
என்னுடை ஆவி உமது மேலே வாஞ்சித்
தேங்கிக் கதறு தெந்தன் சுவாமீ
1 தண்ணீ ராறுகள் கண்டு
தவனமும் வாஞ்சையுமாய்
மன்னிமன்னிக் கதறுகின்ற
வனவேனல் மானைப்போலே – என்னு
2 என்னாவிசீவனுள்ள தெய்வ மான
எகோவாவின்மேலே தாகங் கொள்ளுதே
என்கலி நீங்க மன மகிழ்ந்து தெய்வ
சன்னதிதன்னிலெப்போ சேருவேன்
உன்தெய்வ மெங்கேயென்று
என்னுடன் இரவும்பகலும்
எந்நாளுஞ் சொல்கிறார்கள்
கண்ணீரென் அப்பமாச்சே – என்னு
3 இதுகளைநினைத்தே நான் என் உள்ள மான
இதையத்தை ஊற்றிவிட்டேன் சுவாமீ
துதிசெய்யுங்கும்புக்குள்ளே ஒன்றாய்த்தெய்வந்
தொழுதலின் வீட்டக்கேகி நடந்தேன்
கெதியாகப் பண்டிகையின்
கெம்பீரச் சத்தத்தோடே
மதியுடன் ஏகொவாவை
வணங்கின இன்பமெண்ணி – என்னு
4 என்னுடை ஆத்துமமேமுறிந்து போய் நீ
ஏனென்னிற் கொந்தளித்து நிற்கிறாய்
உன்னுடை தெய்வஞ் செய்யுஞ் செயலை நோக்கி
உண்மையாக் காத்துக்கொண்டே யிருநீ
இன்னமும் அவரின் சமுக
இரட்சிப்புக் காகநானே
உன்னிப்பாய் அவரை யின்னம்
உற்சாக மாகத் துதிப்பேன் – என்னு
5 சிறுமலை யேர்மோன் யோர்தான் நாட்டிலும் நின்று
தேடிநான் உம்மை நினைந்தேனே
முறியுதென் ஆவியென்னில் உமது மதகின்
முழக்கத்தால் ஆழம் ஆழத்தைக் கூப்பிடும்
பிறளுமே உமது வெள்ளம்
பேரலையெல்லாம் என்மேல்
கிருபையோ பகலில்த் தருவீர்
கீர்த்தனம் இரவில்ச்செய்வேன் – என்னு
6 கன்மலைசீவனாம் என் பரனை நோக்கி
என்னையேன் மறந்துவிட்டீ ரென்றேன்
என்னையென் பகைஞன்மிக ஒடுக்க எனக்
கேன்துயர் சூழவேண்டு மென்றேன்
உன்தெய்வ மெங்கேயென்று
என்னுடன் பகைஞர் வீம்பாய்
எந்நாளுஞ் சொல்லும் நிந்தை
எலும்புள்ளே வாதையாகும் – என்னு
7 என்னுடை ஆத்துமமேமுறிந்து போய்நீ
ஏன் என்னில்க் கொந்தளித்து நிற்கிறாய்
உன்னுடை தெய்வஞ் செய்யுஞ் செயலை நோக்கி
உண்மையாய்க் காத்துக்கொண்ட யிருநீ
இன்னமும் நிறைவுத்தாக்காய்
இன்பமாஞ் சமுகங்காட்டி
உன்னைரட்சிக்கும் அவரை
என்தெய்வ மென்று துதிப்பேன் – என்னு