41 சங்கீதம்
41 சங்கீதம்
குறள்- ராகத் தலைவனுக்கு ராசனாந் தாவீது
பாகமா யொப்புவித்த பாட்டு
விருத்தம்
1 சிறுமைப்பட்டவன்மேலே கவனிப்பான
சிந்தையுள்ளோன் பாக்கியவா னவனைக் கற்தர்
சிறுமைவரும் நாளதிலே விடுவிப்பாரே
சீவனைத்தற் காத்துயிரைத் திடத்திவைப்பார்
தறணியிலேஅவன்பாக்யன் அவனை நீர் தான்
சத்துருக்கள்மனதுக்கொப்புக் கொடுக்கமாட்டீர்
திறனிழந்துபிணிப்பட்டுக் கிடக்கும்போது
தெய்வமவ னுடல்காப்பார் சொஸ்தமாக
2 என்மேலே இரக்கம்வையும் என்கற்தாவே
என்னாவி சொஸ்தமுட னிருக்கச் செய்யும்
துன்மார்க்கஞ்செய்தேன் நானுமக்குமுன்னே
சொன்னேன்நான் செய்பாவ மறிக்கையிட்டேன்
எந்நாளி லிவன்சாவான் எந்தக்காலம்
இவன்நாம மழியுமென்று பொல்லாப்பாக
என்னுடையசத்துருக்கள் கூடிப்பேசி
இழிவுடனேசொல்வார்கள் சுவாமிகேளும்
3 என்னையொரு ஆள் பார்க்க வந்தானானால்
இல்லாத அபத்தமெல்லாம் பேசுவானே
தன்னிதையத் தக்கிரமம் பொறுக்கிக்கொண்டு
தான்வெள்ளியே போகுகையிலதைச்சொல்வானே
என்பகைஞர்பொல்லாப்பை நினைத்தெல்லாரும்
ஏகமாய் என்னைப்பகைத்து முணுமுணுத்து
என்னஇவ னெழுந்திருக்கான் பேலியாளின்
கன்மமிவ னுடல்பிடித்த தெனச்சொல்வார்கள்
4 என்னோடே சமாதான மாயிருந்து
என்மனது பிடிப்பாக எனது அப்பந்
தின்னுகொண்டு மிருந்தவன்தான் எனதுமேலே
தன்குதிகால் தனையெடுத்தான் மிகுதியாக
என்ததிக்கு இரங்கியென்னை யெழுப்பிவிட்டு
என்பகைஞர்க் கேற்றபதில் செய்யப்பண்ணும்
என்பகைஞர் என்மேலே கெம்பீரிக்க
இடமில்லையே உமது பட்ச மிதினால்க்கண்டேன்
5 உண்மையுள்ள மனதாக இருந்ததாலே
உமதடியா னானஎன்னைத் தாங்கினீரே
என்னையென்றும் உம்முடைய சமுகந்தன்னில்
இதமாக நிலைநிறுத்தித் திடத்திக்கொண்டீர்
என்றென்று முள்ள சதா காலமாக
இசரவேல்த் தெய்வமென்ற ஏகோவாதாம்
தொன்மையின் அனாதியாங் காலமாகத்
தோத்திரிக்கப் பட்டவரே ஆமன் ஆமன்